டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்பர் 2 இந்தியா.. கலக்கிய அமீரகம்.. உலக நாடுகளில் எவ்வளவு பேருக்கு கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது?

Google Oneindia Tamil News

டெல்லி: 100 கோடி கொரோனா டோஸ்களை செலுத்தி இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவின் வேக்சின் விநியோகம் எப்படி இருக்கிறது? மற்ற வளர்ந்த நாடுகளில் எவ்வளவு வேக்சின் போடப்பட்டுள்ளது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வேக்சின் விநியோகம் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. 278 நாட்களில் இந்தியாவில் இதுவரை 100 கோடி டோஸ்கள் வேக்சின் போடப்பட்டுள்ளது. உலக அளவில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

இந்தியாவில் இதுவரை 70,83,88,485 பேருக்கு மட்டுமே ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதோடு 29,18,32,226 பேருக்கு இரண்டு டோஸ் முழுமையாக போடப்பட்டுள்ளது. இன்னும் கிட்டத்தட்ட 80 கோடி பேருக்கு முழுமையாக இரண்டு வேக்சின் போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி

எப்படி

இந்தியாவை விட சீனாவில் அதிக அளவில் வேக்சின் டோஸ்கள் போடப்பட்டுள்ளது. சீனாவில் 223 கோடி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக வேக்சின் டோஸ்கள் போட்ட நாடுகளில் சீனா முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மக்கள் தொகை இரண்டு நாடுகளிலும் அதிகம் என்பது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மொத்தமாக உலக அளவு 664 கோடி டோஸ்கள் வேக்சின் போடப்பட்டுள்ளது.

இந்தியா எப்படி

இந்தியா எப்படி

இதில் 15 சதவிகித கொரோனா வேக்சின் டோஸ்கள் இந்தியாவின் பங்களிப்பு. உலகின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 48 சதவிகிதம் மக்கள் குறைந்தது ஒரு டோஸ் வேக்சினாவது போட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் 120 கோடி பேர் வரை மொத்தமாக இரண்டு டோஸ் வேக்சின் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட அந்நாட்டு மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேர் இரண்டு டோஸ் வேக்சின் போட்டுள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் இதுவரை 41 கோடி டோஸ்கள் வேக்சின் போடப்பட்டுள்ளது. அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 58 சதவிகிதம் பேர் மொத்தமாக இரண்டு டோஸ் வேக்சின் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 19 கோடி பேர் இரண்டு டோஸ் வேக்சின் பெற்றுள்ளனர். ஐரோப்ப யூனியனில் 57.9 கோடி பேருக்கு வேக்சின் டோஸ்கள் போடப்பட்டுள்ளது. பிரேசிலில் 25 கோடி டோஸ்கள் வேக்சின் போடப்பட்டுள்ளது.

ஜப்பான்

ஜப்பான்

18 கோடி டோஸ்கள் ஜப்பானில் போடப்பட்டுள்ளது. ஜப்பானில் 68.4 சதவிகித பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் 17 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. அமீரகத்தில் மொத்த மக்கள் தொகையில் 86.5 சதவிகிதம் பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அமீரகத்தில்தான் அதிக பேருக்கு (மக்கள் தொகை அடிப்படையில்) இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அங்கு 20 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. அமீரகம் இதில் கலக்கி உள்ளது.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் 29,18,32,226 பேருக்கு இரண்டு டோஸ் முழுமையாக போடப்பட்டுள்ளது. கணக்குப்படி இந்தியாவில் 21 சதவிகிதம் பேருக்கு மட்டும்தான் இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. மீதம் உள்ள 79 சதவிகிதம் பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட வேண்டும். இந்தியாவில் கோவிஷீல்ட்- 87.93 கோடி (88.4%) பேருக்கு போடப்பட்டுள்ளது. கோவாக்சின் - 11.4 கோடி (11.4%) பேருக்கு போடப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி - 10.48 லட்சம் (0.1%) பேருக்கு போடப்பட்டுள்ளது.

English summary
100 Crore Covid Vaccine Doses: Shot in the Arm for India, But Where Does Other Countries like US, China, Japan Stand Globally?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X