டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1045 பக்கங்கள்.. அயோத்தி தீர்ப்பு நகலை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Aspects in Ayodhya verdict | அயோத்தி வழக்கின் தீர்ப்பு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியது.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான, 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்து அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.

    1045 pages verdict given in Ayodhya case

    இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சுமார் அரை மணி நேரம் வாசித்தார். தீர்ப்பை கேட்க நாடு முழுக்கவும் ஆவலோடு காத்திருந்தது.

    இருப்பினும் முழு தீர்ப்பின் அம்சங்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தீர்ப்பு 1045 பக்கங்கள் கொண்டதாக அமைந்து உள்ளது.

    அறிமுகம், வழக்குகளின் கண்ணோட்டம், ஆதாரம் என்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் தீர்ப்பின் அம்சங்கள் விரிவாக, முழுமையாக இதில் இடம்பெற்றுள்ளன.

    ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பு நகலை, நீங்களும் கூட படித்து பார்க்கலாம். உச்சநீதிமன்ற வெப்சைட்டின், இந்த லிங்கை கிளிக் செய்தால், உங்களால் படிக்க முடியும்.

    English summary
    1045 pages verdict given in Ayodhya case, by the Supreme Court, here is the wesite link you cand find.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X