டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ்

ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகைக்கால போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள்.

Google Oneindia Tamil News

டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகை கால போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ரூ.2,081.68 கோடி ஒதுக்கப்படும்

ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.3,737 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் 30.67 லட்சம் ஊழியர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

11.58 lakh non-gazetted Railway employees 78 days wages Bonus

இந்த நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ரூ.2,081.68 கோடி ஒதுக்கப்படும் என்றும் ரூ.7,000 முதல் ரூ.17,951 வரை போனஸ் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
PLB to the eligible non gazetted railway employees is Rs 7000 p.m. The maximum amount payable per eligible railway employee is Rs 17,951 for 78 days. About 11.58 lakh non-gazetted Railway employees have been granted bonus equivalent to 78 days wages for FY 2019-20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X