டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொற்றுநோயை சமாளிக்க 12 வருடங்கள் முன்பே பிளான் போட்ட இந்தியா.. ஆனா என்ன நடந்தது தெரியுமா? பரபர தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: பெரிய அளவிலான பயோலாஜிக்கல் பேரழிவை தடுக்க, இந்தியாவைத் தயார்படுத்துவதற்காக, 12 ஆண்டுகளுக்கு முன்னரே, ஒரு திட்டம் வகுக்கப்பட்டதாகவும், அது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த செயலில் ஈடுபட்ட மூத்த அதிகாரிகள் ஆங்கில ஊடகம் ஒன்றிடம், இப்போது அதை பற்றி தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளனர்.

சமூக விலகல், லாக்டவுன் தயார்நிலை, முக்கியமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை மாநில அளவில் கையிருப்புகளை வைத்துக்கொள்வது, அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய உயிரியல் பேரழிவுகளை எதிர்கொள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயாராக இருப்பதை உறுதி செய்தல் ஆகியவை இந்த திட்டத்தில் இருந்ததாம்.

கொரோனா பாதிப்பு.. தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஏன் கொடுக்கவில்லை? மத்திய அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ் கொரோனா பாதிப்பு.. தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஏன் கொடுக்கவில்லை? மத்திய அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

தேசிய பேரிடர் மீட்பு படை

தேசிய பேரிடர் மீட்பு படை

1999 கார்கில் போரின் போது மருத்துவ தளவாட பிரச்சினைகளை சிறப்பாக கையாண்டதற்காக பாராட்டுகளைப் பெற்றவர், ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் முன்னாள் இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஜே.ஆர்.பரத்வாஜ். இவர் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்பு படையால்தான் (ன்.டி.ஆர்.எஃப் ) இந்த ஆயத்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்போது, மத்திய அரசு கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் பல சிக்கல்களை சந்திக்கிறது. ஒருவேளை, பரத்வாஜ் குழு உருவாக்கிய திட்டங்களை படிப்படியாக அமல்படுத்தியிருந்தால், இன்று இந்த தடுமாற்றம் ஏற்பட்டிருக்காது.

திட்டம்

திட்டம்

நாங்கள் வகுத்த திட்டங்களையும், தீர்வுகளையும் மேம்படுத்துவதற்குப் பதிலாக, அது முடக்கப்பட்டது. அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால், என்ன மாதிரி மருத்துவ உபகரணங்கள் உள்ளன, எங்கு கிடைக்கின்றன என்பது பற்றிய தெளிவான பார்வை நம்மிடம் இருந்திருக்கும் என்று கூறியுள்ளார், அந்த குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர்.

மன்மோகன்சிங்

மன்மோகன்சிங்

2008 இல் வெளியிடப்பட்ட 2008 என்.டி.ஆர்.எஃப் அறிக்கையின் பொது இந்த திட்டம் அப்போதைய, பிரதமர் மன்மோகன் சிங்குடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இருப்பினும், ஆரம்பத்தில் சில முன்னேற்றம் காணப்பட்டாலும், முக்கிய அமைச்சகங்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. எனவே அந்த திட்டத்தை வகுக்க முடியாத நிலை உருவானது என்றும் அந்த அதிகாரி ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்துல்லார்.

அமைச்சர்கள் பணி

அமைச்சர்கள் பணி

முன்னாள் ராணுவத் தலைமை ஜெனரல் என்.சி. விஜ், 2005 முதல் என்.டி.ஆர்.எஃப் துணைத் தலைவராகவும் இருந்தவர். அவர் இதுபற்றி கூறுகையில், அமைச்சகங்கள் இந்தியாவுக்கு, என்.டி.ஆர்.எஃப் போன்ற எதுவும் தேவையில்லை என்று நினைத்தன. ஏனெனில், பல்வேறு அமைச்சகங்கள் என்.டி.ஆர்.எஃப் வேலையைத்தான் செய்து கொண்டிருந்தன. "அமைச்சர்கள் செய்யும் பணிகள் சிறந்தது என்பதை நான் மறுக்கவில்லை, ஆனால் அமைச்சகங்களின் பணிச்சுமை மற்றும் நிர்வாக கவன சிதறல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால், அவர்களால் இதுபோன்ற நீண்ட கால திட்டங்களை வகுப்பதற்கான நேரம் கிடையாது என்பதுதான் யதார்த்தம்" என்று விஜ் தெரிவித்துள்ளார்.

பயிற்சிகள்

பயிற்சிகள்

என்.டி.ஆர்.எஃப் திட்டம் "சமூக-விலகல் நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நுட்பங்கள் போன்ற மருந்து அல்லாத விஷயங்களை பயன்படுத்தி பயோலாஜிக்கல் பிரச்சினைகளில் இருந்து தப்பும் திட்டங்களை கொண்டிருந்தது" என்று ஒரு அதிகாரி சுட்டிக் காட்டியுள்ளார். இபோன்ற நடவடிக்கைகளுக்கு சமூகங்களை தயார்படுத்துவது, இதற்காக அவ்வப்போது பயிற்சிகள் கொடுப்பது போன்ற திட்டங்களும் இருந்ததாம். ஆனால், அமைச்சகங்கள் பலவும் இதை விரும்பாததால், அந்த திட்டத்தை அப்போதைய அரசு கைவிட்டுள்ளது என்பது இப்போது தெரியவந்துள்ளது.

English summary
A shocking revelation has now emerged that a plan had been drawn up and put on hold 12 years ago to prepare India to prevent a large-scale biological disaster.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X