டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை.. 145 இந்தியர்களை கை, கால்களை கட்டி விமானம் மூலம் அனுப்பிய அமெரிக்கா

Google Oneindia Tamil News

டெல்லி: விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை என்பதால் சட்டவிரோதமாக தங்கியிருந்த 145 இந்தியர்களின் கை, கால்களை கட்டி விமானம் மூலம் அமெரிக்க அரசு அனுப்பியுள்ளது.

அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளும் விசா கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

விசா காலம் முடிந்த பிறகு தங்கியிருப்பவர்கள், போலி பெயர்களில் சட்டத்துக்கு புறம்பாக தங்கியிருப்பவர்களை உள்ளூர் மக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

டாக்கா

டாக்கா

இந்த நிலையில் விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பிவிட்டது. இதில் 142 ஆண்கள், 3 பெண்கள் ஆவர். இவர் அரிசோனா மாகாணத்திலிருந்து டாக்கா வழியாக டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

145 இந்தியர்கள்

145 இந்தியர்கள்

டெல்லி வரை இவர்களது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. பின்னர் டெல்லி வந்ததும் இவர்களது கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. இந்த 145 இந்தியர்களுடன் இலங்கை, வங்கதேசம் ஆகிய நாட்டினரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

25 லட்சம் ரூ

25 லட்சம் ரூ

நாடு திரும்பியவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியானா, மும்பை , குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் ஏஜெண்டுகளிடம் ரூ 25 லட்சம் வரை கொடுத்து ஏமார்ந்துள்ளனர்.

சட்டவிரோதம்

சட்டவிரோதம்

இது போல் மற்ற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக புலம் பெயர்ந்தவர்களையும் கை, கால்களை கட்டி வைத்து விமானத்தில் அனுப்பி வைத்தது அமெரிக்க அரசு. சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

English summary
145 illegal migrants has sent from America to Delhi with their hands and feet tied.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X