டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு.. உச்சநீதிமன்றம் நம்பிக்கை.. குமாரசாமிக்கு சிக்கல்

Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி அரசு இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடகோரி 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.

"நாங்கள் கவனித்துக் கொண்டு உள்ளோம், சபாநாயகர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்று விசாரணை நடத்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தெரிவித்ததோடு, விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.

15 MLAs wont comes under whip purview: Mukul Rohatgi

எச்.நாகேஷ் மற்றும் சங்கர் ஆகிய சுயேச்சைகள்தான், உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுயேச்சைகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகிய (அதிருப்தி எம்எல்ஏக்களுக்காகவும் இவரே ஆஜரானார்) முகுல் ரோத்தகி, நிருபர்களிடம் கூறியதாவது: இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. ஒருவேளை, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காவிட்டால், நாளை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றமே உத்தரவிட வேண்டும் என்று, வலியுறுத்துவோம்.

பாஜகவிற்கு உண்மையாக தேச பக்தி இருப்பதை நிரூபிக்க ஒரு சான்ஸ்.. கர்நாடக அமைச்சர் செம சவால் பாஜகவிற்கு உண்மையாக தேச பக்தி இருப்பதை நிரூபிக்க ஒரு சான்ஸ்.. கர்நாடக அமைச்சர் செம சவால்

மேலும் ராஜினாமா செய்த 15 எம்எல்ஏக்களும் உச்சநீதிமன்ற சட்டப் பாதுகாப்பில் உள்ளனர். அவர்களை கட்டாயப்படுத்தி சட்டசபை அழைக்க முடியாது. விப் உத்தரவும் அவர்களை கட்டுப்படுத்தாது. சபாநாயகர் நோட்டீசுக்கு பதிலளித்து அவர்கள் நேரில் ஆஜராகவும் தேவையில்லை. இவ்வாறு முகுல் ரோத்தகி தெரிவித்தார்.

English summary
15 MLAs who got protection from the Supreme Court won't comes under whip purview, says senior lawyer Mukul Rohatgi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X