டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.. பிரதமர்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா முழுவதும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த ரூ 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

15000 cr allocated for upgrading medical facilities to fight corona- Modi

இதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவை கொண்டு கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுடன் இணைந்து மக்கள் செயல்பட்டால்தான் கொரோனா பாதிப்பை 100 சதவீதம் கட்டுப்படுத்த முடியும். கொரோனாவை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.

கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்.. வீட்டிலேயே இருங்க.. வெளியே போனால் கொரோனா உள்ளே வரும்- மோடிகையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்.. வீட்டிலேயே இருங்க.. வெளியே போனால் கொரோனா உள்ளே வரும்- மோடி

மூடநம்பிக்கை, வதந்திகளை நம்பாதீர்கள். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவ வசதிகளையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த ரூ 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த நிதியானது கொரோனா சோதனை வசதிகள், தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள், ஐசியுக்கள், செயற்கை சுவாசங்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி ஆகியவற்றுக்காக செலவிடப்படும்.

English summary
PM Narendra Modi says that Rs. 15000 Crore allotted for upgrading medical facilities to fight corona.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X