இந்தியாவில் மீண்டும் எகிறிய கொரோனா பாதிப்பு.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. முழு விபரம் இதோ!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,159 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில், சில வாரங்களாக மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகலை மக்கள் கைவிட்டதே கொரோனா பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது
பிரேசிலில் பயங்கரம்.. 74,528 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று.. உலக அளவில் இதுவரை 6,364,028 பேர் பலி

வடமாநிலங்களில் பாதிப்பு
டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிகமாகி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சில மாநிலங்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடுவதில் தாமதம் காரணமாகவே நோய் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

புதிய பாதிப்பு
இந்நிலையில் இந்தியாவில் 13 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,159 பேருக்கு கொரோன வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 34 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
அதேபோல் கொரோனா காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தி ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 268ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 15,394 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 07 ஆயிரத்து 327 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி நடவடிக்கை
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1 லட்சத்து 15 ஆயிரத்து 212 சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 198 கோடியே 20 லட்சத்து 86 ஆயிரத்து 763 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் கட்டுப்பாடுகளும் நாளுக்கு நாள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவெளியில் பயணிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.