டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நைஜீரியா அருகே 18 இந்தியர்களுடன் ஹாங்ஹாங் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: நைஜீரியா அருகே தென் அட்லாண்டிக் கடற்பரப்பில் ஹாங்ஹாங் கப்பலில் இருந்து 18 இந்தியர்கள் உட்பட 19 பேரை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக நைஜீரியா அரசை தொடர்பு கொண்டு இந்திய தூதரக அதிகாரிகள் விவரங்களை கேட்டு வருகின்றனர்.

ஹாங்ஹாங் கப்பல் ஒன்றில் 19 பேர் தெற்கு அட்லாண்டிக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தனர். இதில் 18 பேர் இந்தியர்கள். அப்போது நடுக்கடலில் திடீரென கடற்கொள்ளையர்கள் கப்பலை வழிமறித்தனர்.

18 Indians on board Hong Kong vessel kidnapped near Nigerian coast

19 பேருடன் அந்த கப்பலை தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கடற்கொள்ளையர்கள் கொண்டு சென்றனர். அந்த 19 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.

மதங்களின் அடிப்படையில் நாடுகள்... இந்துக்களுக்கு ஏன் ஒரு நாடு இருக்கக் கூடாது? பாஜக எம்பி ரவி கிஷன்மதங்களின் அடிப்படையில் நாடுகள்... இந்துக்களுக்கு ஏன் ஒரு நாடு இருக்கக் கூடாது? பாஜக எம்பி ரவி கிஷன்

இந்நிலையில் நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அந்நாட்டு அரசை தொடர்பு கொண்டுள்ளனர். கடத்தப்பட்ட இந்தியர்கள் நிலைமை என்ன என்பதை இந்திய அதிகாரிகள் கேட்டு வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Indian mission is in touch with Nigerian authorities after reports of kidnapping of 18 Indians onboard the Hong Kong vessel, that was hijacked near Nigeria.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X