டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனியார் ரயில்களில் வசூல் குறைஞ்சா.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: தனியார் ரயில்களில் வசூல் குறைந்தால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அரசுக்கு 180 மடங்கு அபராதம் செலுத்த வேண்டியது வரும் என்பது வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு. குறிப்பாக ரயில்வேயில் 100 முக்கிய வழித்தடங்களை தனியாருக்கு கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்தள்ளது.

சென்னை- கோவை, சென்னை-பெங்களூரு, சென்னை-மதுரை, சென்னை-டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இனி தனியார் ரயில்கள் ஓடப்போகிறது.

 வீடியோ.. எஜமானை காப்பாற்ற விஷ பாம்புடன் ஆக்ரோசமாக சண்டை போட்ட நாய்கள்.. முடிவு அதிரடி வீடியோ.. எஜமானை காப்பாற்ற விஷ பாம்புடன் ஆக்ரோசமாக சண்டை போட்ட நாய்கள்.. முடிவு அதிரடி

அதிக வருவாய்

அதிக வருவாய்

இதற்கான விதிகள், ஒப்பந்த மாதிரிகள் நிதி ஆயோக்கின் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தனியார் ரயில் இயக்க ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்கள், ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதத்தைவிட ஒரு சதவீதம் அதிகம் வருவாய் ஈட்ட வேண்டும்.

180 மடங்கு அபராதம்

180 மடங்கு அபராதம்

வருவாய் இலக்கு குறைந்தால் அதனால் ஏற்படும் வித்தியாச தொகையை 180 மடங்கு அபராதத்துடன் ஒப்பந்த நிறுவனம் செலுத்த வேண்டும் என வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான கட்டணம்

விமான கட்டணம்

தனியார் ரயில்களை அதை நிர்வகிப்பவர்களே கட்டணத்தை நிர்ணயிக்கலாம் என்பது விதியாகும். இந்த சூழ்நிலையில் வசூல் குறைந்தால் ஒப்பந்த நிறுவனத்துக்கு அதிக அபராதம் விதிக்கப்படுவதால் அதற்கு ஏற்றவாறு தனியார் நிறுவனங்களின் கட்டணமும் இருக்க போகிறது.

பெரும் கேள்வி

பெரும் கேள்வி

எனவே இனிமேல் ரயில் டிக்கெட் கட்டணம் விமான டிக்கெட்டுக்கு நிகராக உயர்த்தப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. சாமானியர்கள் செல்லும் வகையில் தனியார் ரயில்கள் இருக்குமா என்பது பெரும்கேள்வி எழுந்துள்ளது.

English summary
180 times Fines on private trains if Collection is short: says Draft Report
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X