டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

19 ராஜ்யசபா இடங்கள்.. கட்சிகளுக்கு இடையே நடக்கும் தீவிர போட்டி.. எங்கே என்ன நிலவரம்.. முழு விபரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: 19 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு இன்று ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சில மாநிலங்களில் கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது.

நாடு முழுக்க 8 மாநிலங்களில் 19 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு இன்று ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து 24 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கான தேர்தலில் 19 இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இன்று மாலையே இதன் முடிவுகள் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 24 இடங்களுக்கு தேர்தல் நடக்க வேண்டும். இதில் 5 எம்பிக்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வானார்கள். இதனால் மீதம் இருக்கும் 19 இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இன்று ராஜ்யசபா தேர்தல்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 19 எம்.பி. இடங்கள் இன்று ராஜ்யசபா தேர்தல்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 19 எம்.பி. இடங்கள்

எந்த மாநிலங்கள்

எந்த மாநிலங்கள்

  • மொத்தம் 19 இடங்களுக்கு ராஜ்ய சபா தேர்தல் நடக்கிறது.
  • ஆந்திர பிரதேசம், குஜராத் - 4 ராஜ்யசபா இடங்கள்
  • மத்திய பிரதேசம், ராஜஸ்தான் - 3 ராஜ்யசபா இடங்கள்
  • ஜார்கண்ட் - 2 ராஜ்யசபா இடங்கள்
  • மணிப்பூர், மிசோரம், மேகாலயா - தலா ஒரு ராஜ்யசபா இடம்
குஜராத் எப்படி

குஜராத் எப்படி

குஜராத்தில் 4 இடங்களில் காங்கிரஸ் சார்பாக 2 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பாஜக மூன்று வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. காங்கிரஸ் சார்பாக சக்தி சிங் கோஹில்,பாரத்சின் சோலங்கி ஆகியோரும், பாஜக சார்பாக பரத்வாஜ், ரமீலாபென் பாரா, நர்ஹாரி அமீன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். குஜராத்தில் மொத்தம் பாஜகவிற்கு 103 எம்எல்ஏக்கள் உள்ளனர், காங்கிரசுக்கு 65 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரசின் 8 எம்எல்ஏக்கள் கடந்த சில நாட்களாக ராஜினாமா செய்துள்ளனர் .

ராஜஸ்தான் எப்படி

ராஜஸ்தான் எப்படி

ராஜஸ்தானில் காங்கிரசுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். 12 சுயேச்சை ஆதரவு உள்ளது. பாஜகவிற்கு 72 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரசின் மூத்த தலைவர்கள் கேசி வேணுகோபால், நீரஜ் தங்கி ஆகியோர் இங்கு காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார்கள். பாஜக சார்பாக ராஜேந்திர கொஹ்லட், ஓம்கார் சிங் போட்டியிடுகிறார்கள். அங்கு 3 ராஜ்யசபா சீட்களுக்கு போட்டி நடக்கிறது.

மத்திய பிரதேசம் எப்படி

மத்திய பிரதேசம் எப்படி

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 3 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. அங்கு பாஜக சார்பாக முன்னாள் எம்பி சிந்தியா, சுமார் சிங் சோலங்கி போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் சார்பாக திக் விஜய் சிங் , சிங் பறையா போட்டியிடுகிறார்கள். அங்கிருக்கும் 230 இடங்களில் 107 எம்எல்ஏக்கள் பாஜகவிடம் உள்ளனர் . காங்கிரஸ் கட்சியிடம் 92 எம்எல்ஏக்கள் உள்ளனர். 22 இடங்கள் காலியாக உள்ளது.

ஆந்திர பிரதேசம் நிலை

ஆந்திர பிரதேசம் நிலை

ஆந்திர பிரதேசத்தில் 4 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் நான்கிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று கூறுகிறார்கள். அங்கிருக்கும் 175 எம்எல்ஏக்களில் 151 எம்எல்ஏக்கள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். இந்த தேர்தலில் அந்த மாநில துணை முதல்வர் பில்லி சுபாஷ் சந்திர போஸ் எம்பி தேர்தலுக்கு நிற்கிறார். அதேபோல் ரிலையன்ஸ் நிறுவன மூத்த அதிகாரி பரிமள் நாத்வானிரே தேர்தலில் நிற்கிறார்.

Recommended Video

    Rajya Sabha Election - BJP's Chances
    வேறு எங்கு

    வேறு எங்கு

    இது போக ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோச்சா தலைவர் சிபு சோரன் காங்கிரஸ் கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார். ஜார்கண்ட், மிசோரம், மேகாலயாவில் தலா ஒரு ராஜ்யசபா இடத்திற்கு போட்டி நடக்கிறது. மேகாலயாவில் என்பிபி கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே போட்டி உள்ளது. மணிப்பூரில் 9 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    19 seats, 8 states: ALL you need to know about Rajya Sabha Election 2020.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X