டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எக்ஸிட் போல் முடிவுகள் 'இறுதி தீர்ப்பு அல்ல'.. தலைகீழாக பொய்த்து போன வரலாறுகளும் உண்டு!

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என்கின்றன. ஆனால் கடந்த 5 லோக்சபா தேர்தல்களில் இத்தகைய கருத்து கணிப்புகள் பொய்த்து போன வரலாறுகளும் இருக்கின்றன.

லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துவிடும் என்பதே பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள். அதுவும் பாஜக 300க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன இந்த எக்ஸிட் போல் முடிவுகள்.

கள நிலவரங்களுக்கும் எக்ஸிட் போல் முடிவுகளுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறதே என்கிற ஆதங்கங்களும் வெளிப்படுகின்றன. ஏனெனில் கடந்த கால எக்ஸிட் போல் முடிவுகள் தலைகீழாகவே மாறிய நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

எக்ஸிட் போல் முடிவுகளின் படி பா.ஜக-வுக்கு பெரும்பான்மை கிடைக்காது.. உரக்க சொல்லும் எதிர்கட்சிகள் எக்ஸிட் போல் முடிவுகளின் படி பா.ஜக-வுக்கு பெரும்பான்மை கிடைக்காது.. உரக்க சொல்லும் எதிர்கட்சிகள்

1999 லோக்சபா தேர்தல்

1999 லோக்சபா தேர்தல்

1999 லோக்சபா தேர்தலில் பாஜக நிச்சயம் 300 முதல் 336 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று தற்போது போலவே அத்தனை எக்ஸிட் போல் முடிவுகளும் சத்தியம் செய்து பேசின. ஆனால் பாஜக 296 இடங்களைத்தான் கைப்பற்றியது. அத்தேர்தலில் இதர கட்சிகள் அதிகபட்சமாக 95 இடங்களில் வெல்லும் என கணித்தன எக்ஸிட் போல்கள். தேர்தல் முடிவுகளில் 113 இடங்கள் இதர கட்சிகளுக்கு கிடைத்தன.

2004-ல் தலைகீழ்

2004-ல் தலைகீழ்

இதைவிட 2004 லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் பெரும் நகைப்புக்குரியதாகின. பாஜகவுக்கு 250 முதல் 290 இடங்கள் கிடைத்துவிடும் என்றன கருத்து கணிப்புகள். ஆனால் பாஜகவுக்கு 189 இடங்கள்தான் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு 205 இடங்கள்தான் அதிகபட்சம் கிடைக்கும் என கூறப்பட்ட நிலையில் அக்கட்சி 222 இடங்களில் வென்றது.

2009 லோக்சபா தேர்தல்

2009 லோக்சபா தேர்தல்

2009 லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள் ஆகப் பெரும் பிழையாகிப் போகின. பாஜகவுக்கு 177 முதல் 197 இடங்கள் கிடைக்கும் என்றன கருத்து கணிப்பு முடிவுகள். தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு கிடைத்தது 159 மட்டும்தான். காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 216 இடங்கள்தான் கிடைக்கும் என்றன அக்கணிப்புகள். தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது 262 இடங்கள். அத்தேர்தலில் இதர கட்சிகள் 130 முதல் 172 இடங்களைக் கைப்பற்றும் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்தன. ஆனால் இதர கட்சிகள் 79 இடங்களைத்தான் கைப்பற்றின.

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாத காங்.

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாத காங்.

2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 70 முதல் 148 இடங்கள் கிடைக்கும் என்றன தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள். அக்கட்சி 44 இடங்களைத்தான் பெற முடிந்தது. எக்ஸிட் போல் முடிவுகள் இப்படி தலைகீழாக மாறியும் வந்திருப்பதால்தான் எதிர்க்கட்சிகள் 'சீரியசாக' இதை கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.

English summary
Four exit polls have predicted wrongly barring those in the 1998 and 2014 Loksabha Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X