டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயதுறைக்கு பல கோடி நிதி உதவி.. பயன்பெற்ற 2.5 கோடி விவசாயிகள்.. பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்

Google Oneindia Tamil News

டெல்லி: கிஷான் கிரெடிட் கார்ட் மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பை கடந்த மே மாதம் வெளியிட்டார். இந்த நிலையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை அறிவிக்க உள்ளார்.

இந்தியா தற்போது மாபெரும் பொருளாதார மந்தநிலையை நோக்கி செல்ல போவதாக ஆர்பிஐ கணித்துள்ள நிலையில்.. இந்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக திட்டமிடப்பட்டு இந்த நிதி பேக்கேஜ் அறிவிப்புகள் இன்று வெளியாகி உள்ளது.

வலிமை இழந்துவிட்டோம்.. முதல்முறையாக இந்தியாவில் பொருளாதார மந்தநிலை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு! வலிமை இழந்துவிட்டோம்.. முதல்முறையாக இந்தியாவில் பொருளாதார மந்தநிலை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரு நாடு - ஒரு ரேஷன் திட்டம் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 28 மாநிலங்களில் இந்த திட்டம் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 68.8 கோடி மக்கள் இந்த திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர்.

நலத்திட்டம்

நலத்திட்டம்

இடம்பெயர் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.பல்வேறு அமைச்சர்கள் இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். நபார்ட் நிதி மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கிஷான் கிரெடிட்

கிஷான் கிரெடிட்

கிஷான் கிரெடிட் கார்ட் மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1.4 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.அவசரகால கடன் திட்டம் மூலம் 2.05 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

 அவசரகால கடன் திட்டம்

அவசரகால கடன் திட்டம்

61 லட்சம் பேருக்கு அவசரகால கடன் திட்டம் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூ.1,32,800 கோடி வருமான வரி 39.7 லட்சம் பேருக்கு ரீ-பண்ட் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அவசரகால ஊக்க கடன் திட்டம் மார்ச் 31, 2021 வரை தொடரும், என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

English summary
2.5 Crore farmers got credit through Kishan Credit Cards says FM Nirmala Sitharaman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X