நிலக்கரி தட்டுப்பாடு.. சிக்கலில் இந்தியா.. நாடு முழுவதும் 20 அனல் மின் நிலையங்கள் மூடல்?
டெல்லி: நிலக்கரி தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் 20 அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 'கடும் நிலக்கரி தட்டுப்பாட்டில் நாடு சிக்கி தவிக்கிறது. இதனால் இன்னும் சில தினங்களில் நாடு முழுவதும் மின்தடை ஏற்பட போகிறதாம்'' என்பதே நாட்டு மக்களின் பேசும் பொருளாக இருக்கிறது,
குட் நியூஸ்.. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆம்.. நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலக்கரிக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 135 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் நாட்டின் மின் தேவையில் சுமார் 70% வரை மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

சிக்கலில் இந்தியா
கொரோனா ஊரடங்குக்கு பிறகு நாட்டில் தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் மின் தேவை ஜெட் வேகத்தில் உயர்ந்தததால் இருப்பில் இருந்த நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு அடிபிடியாக சென்று விட்டது. இது தவிர சீனாவிலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெளிநாட்டு நிலக்கரி நிறுவனங்களுக்கு கிராக்கி அதிகமானதால் விலையை தாறுமாறாக உயர்த்தின. இதனால் வெளிநாட்டில்
இருந்தும் இறக்குமதி செய்ய முடியாமலும், உள்நாட்டிலும் நிலக்கரி இல்லாமலும் இந்தியா சிக்கி தவிக்கிறது.

மின்சாரம் துண்டிக்கப்படலாம்
மேலும், கனமழை காரணமாகவும், நிலக்கரி சுரங்கங்ளில் நிலக்கரி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுவும் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணமாகும். பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக அறிவித்துள்ளன. மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையை விரைவாக தீர்க்காவிட்டால் டெல்லியில் பல நாள் மின்சாரம் துண்டிக்கப்படலாம். இதில் பிரதமர் தலையிட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதை தொடர்ந்து இந்த விவகாரம் நாடு முழுவதும் கவனம் ஈர்த்தது.

மத்திய அரசு விளக்கம்
ஆனால் நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களில் 72 லட்சம் டன் நிலக்கரி என்று நான்கு நாட்கள் நிலக்கரி இருப்பு உள்ளது. மின்தடை ஏற்படாது. இது தவறான பிரசாரம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. நிலக்கரி இருப்பை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இதற்காக குழு அமைத்து இருப்பதாகவும் மத்திய நிலக்கரி அமைச்சகம் கூறியது. மத்திய அரசின் விளக்கம் இப்படி இருக்க நாட்டில் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது

20 அனல் மின் நிலையங்கள்
அதாவது நிலக்கரி தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் 20 அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பஞ்சாபில் மூன்று அனல் மின் நிலையங்கள், மகாராஷ்டிராவில் 13 அனல் மின் நிலையங்கள் உள்பட அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இது தவிர உத்தரபிரதேசத்தில் 8 மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படுவதை நிறுத்திவிட்டன என்று தகவல்கள் கூறுகின்றன.