டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

85 நாட்கள் நடந்த கார்கில் போர்.. ஆபரேஷன் விஜய் மூலம் பாக்.கை வீழ்த்திய இந்தியா.. அன்று என்ன நடந்தது?

காஷ்மீரில் நடந்த கார்கில் போரில் இந்தியா வென்றதை நினைவுகூரும் விதமாக இன்று கார்கில் போர் வெற்றி நாள் கொண்டாடப்படுகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீரில் நடந்த கார்கில் போரில் இந்தியா வென்றதை நினைவுகூரும் விதமாக இன்று கார்கில் போர் வெற்றி நாள் கொண்டாடப்படுகிறது.

Recommended Video

    Karigil நினைவு தினம்: பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்

    கார்கில் போர் 1999ல் நடைபெற்றது. இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த இந்த போர் கார்கில் பகுதியை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டது. இந்தியா நடத்திய, கலந்து கொண்ட போர்களில் கார்கில் போர்தான் இன்று வரை மிகவும் தீவிரமான போர் ஆகும்.

    1999 மே 3ம் தேதி தொடங்கிய போர் ஜூலை 26ம் தேதி வரை நடந்தது. இரண்டு நாடுகளிலும் இந்த போர் காரணமாக பலநூறு பேர் மரணம் அடைந்தனர். இந்த போரில் வென்றதை நினைவுகூரும் விதமாக 26ம் தேதி ஜூலை மாதம் கார்கில் போர் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் பதவியேற்பு மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் பதவியேற்பு

    என்ன ஆக்கிரமிப்பு

    என்ன ஆக்கிரமிப்பு

    மிகவும் அமைதி நிலவி வந்த காஷ்மீரின் கார்கில் பகுதியை 1999 மே மாதம் பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. கார்கில் பகுதியில் டைகர் மலை , ரொலோலிங் மலை, பத்ரா டாப், ஸ்ரீநகர் லே தேசிய நெடுஞ்சாலை தொடங்கி பல முக்கியமான இடங்களை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. முக்கியமாக ஸ்ரீநகர் லே தேசிய நெடுஞ்சாலையைத்தான் பாகிஸ்தான் ராணுவம் குறி வைத்தது.

    எப்படி நடந்தது

    எப்படி நடந்தது

    இந்த போர் தொடங்க காரணமே ஆடு மேய்த்த இளைஞர் ஒருவர்தான். ஆம், அவர்தான் முதலில் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவம் இருப்பதை பார்த்துவிட்டு இந்திய ராணுவத்திற்கு தகவல் கொடுத்தார். முதலில் இவர்களை காஷ்மீர் பிரிவினைவாதிகள் என்று நினைத்த இந்திய ராணுவம், நேரில் சென்று பார்த்த போதுதான் உண்மையை தெரிந்து கொண்டது. அங்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் பலர் இருந்த விஷயமே தெரிந்தது.

    அடுத்து

    அடுத்து

    இதையடுத்து உடனடியாக ராணுவ தலைமையகம் அலெர்ட் செய்யப்பட்டு, ராணுவ படை பல பட்டாலியன்களாக பிரிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு இடையில் முதற்கட்டமாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த இந்தியாவை சேர்ந்த கேப்டன் சோரப் கைலா உட்பட 6 ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் மோசமாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

    எப்படி தீவிரம்

    எப்படி தீவிரம்

    இதையடுத்துதான் கார்கில் போர் தீவிரம் அடைந்தது. பாகிஸ்தான் உடனடியாக இந்தியா மீது தீவிரமாக காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தியது. கார்கில் பகுதியில் உள்ள என்எச் 1ஏ சாலையில் பாகிஸ்தான் குண்டுகளை வீசியது. ஸ்ரீநகர் லேவுடன் இணைக்கும் சாலை ஆகும் இது. இதை பாம் வைத்து தகர்ந்ததன் மூலம், கார்கில் பகுதி தனித்து விடப்பட்டது.

    மிக மிக மோசம்

    மிக மிக மோசம்

    அதை அடுத்து பிப்ரவரி 1999ல் பாகிஸ்தான் மேலும் படைகளை அனுப்பி கார்கில் பகுதியில் குவித்தது. இதையடுத்து இந்தியா தரைப்படை, விமானப்படை இரண்டையும் தீவிரமாக அங்கு களமிறக்கியது. இதனால் முழு போர் இரண்டு நாடுகளுக்கு இடையில் தீவிரமாக நடைபெற தொடங்கியது. இந்த போரில் கார்கில் பகுதியில் இருந்த டைகர் மலைதான் மிக முக்கியமான திருப்பு முனையாக இருந்தது .

    எந்த இடம் முக்கியம்

    எந்த இடம் முக்கியம்

    இந்த டைகர் மலையை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றி வைத்து இருந்தது. இந்த மலை 5307 மீட்டர் உயரம் கொண்ட மலை ஆகும். இதன் மூலம் பாகிஸ்தான் எளிதாக இந்திய ராணுவத்தை கண்காணித்தது. இந்தியாவிற்கு சொந்தமான இந்த பகுதியை கைப்பற்ற இந்திய ராணுவம் ஆபரேஷன் விஜய் என்ற பிளானை கையில் எடுத்தது. உலகில் மிக உயரமான இடத்தில் நடந்த போர் என்று டைகர் மலையில் நடந்த போர் வர்ணிக்கப்படுகிறது.

    விமான தாக்குதல்

    விமான தாக்குதல்

    முதலில் இந்திய விமானப்படை இங்கு பெரிய அளவில் உதவ முடியாமல் சொதப்பியது. MiG-21 மற்றும் MiG-27 இரண்டு விமானங்களை போர் தொடங்கிய சில நாட்களிலேயே இந்திய ராணுவம் இழந்தது . அதன்பின் விரைவில் மிக் 17 விமானத்தை இழந்தது. இதில் ஒரே நாளில் 4 விமானப்படை அதிகாரிகள் பலியானார்கள். அதன்பின் முழு விமானப்படையும், கடற்படையும் களமிறக்கப்பட்டது.

    தாக்குதல் திட்டம்

    தாக்குதல் திட்டம்

    இந்திய கடலோரத்தில் கடற்படை பாகிஸ்தான் துருப்புகளை நோக்கி தாக்கியது. அந்தமான், நிகோபார், தமிழகம், கேரளா என்று எல்லா பகுதியிலும் பணியில் இருந்த ராணுவ படைகள் கார்கில் பக்கம் திருப்பப்பட்டது. இதனால் போர் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் பக்கம் சாதகமாக திரும்பிக் கொண்டு இருந்தது.

    கண்டனம்

    கண்டனம்

    இந்த போர் நடக்கும் போது உலக நாடுகள் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மன், ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட உலகின் முக்கியமான நாடுகள் பாகிஸ்தானை விமர்சனம் செய்தது . அதேபோல் பாகிஸ்தான் உடன் இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    தீவோ

    தீவோ

    இந்த கார்கில் போர் அப்படியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பல போர் காட்சிகள் நொடிக்கு நொடி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. சில போர் காட்சிகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு பின் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    வெற்றி

    வெற்றி

    இந்த போரில் இந்தியாவிற்கு முதல் வெற்றி கிடைத்தது ஆப்ரேஷன் விஜய் வெற்றிபெற்றபின்தான். விமானப்படை உதவியுடன், டைகர் மலை பகுதியை ஜூலை மாதம் இந்தியா கைப்பற்றியது. இதனை அடுத்த வரிசையாக இந்தியா அடுத்தடுத்த ஆக்கிரமிப்பு பகுதியை கைப்பற்றி வெற்றியை நோக்கி நகர்ந்தது.

    வெற்றி கிடைத்தது

    வெற்றி கிடைத்தது

    இந்த நிலையில் சரியாக ஜூலை மாதம் இரண்டாம் வாரம் கார்கில் பகுதியில் அனைத்து இடங்களையும் இந்தியா கைப்பற்றியது. பாகிஸ்தான் பிடித்து வைத்திருந்த டைகர் மலை , ரொலோலிங் மலை, பத்ரா டாப், ஸ்ரீநகர் லே தேசிய நெடுஞ்சாலை தொடங்கி எல்லா இடங்களையும் இந்தியா மொத்தமாக கைப்பற்றியது. இதன் மூலம் ஜூலை 26ம் தேதி கார்கில் பகுதியை மீண்டும் கைப்பற்றி, இந்தியா அங்கு கொடி நாட்டியது.

    என்ன மறுப்பு

    என்ன மறுப்பு

    போரில் தோல்வி அடைந்ததும் இதை நாங்கள் நடத்தவில்லை. காஷ்மீர் பிரிவினைவாதிகள் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் கார்கில் பாகிஸ்தான் முகாமில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் பாகிஸ்தான் அரசு நேரடியாக போரில் களமிறங்கி தோல்வி அடைந்தது நிரூபணம் ஆனது.

    எத்தனை மரணம்

    எத்தனை மரணம்

    இந்த போர் மொத்தம் 85 நாட்கள் நடந்தது. இந்தியா தரப்பில் இந்த போர் மூலம் 500 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். 1500 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 4200 பேர் பலியானார்கள். அதேசமயம் அங்கு 1200 பேர்தான் பலியானார்கள் என்று வேறு சில அரசு தரப்பு ஆவணங்களும் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    20 years of Kargil war: Operation Vijay helped India to win Pakistan a major war.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X