டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வருது.. 2013ம் ஆண்டிலேயே சங்கு ஊதிய நபர்.. 2016ம் ஆண்டுடன் மாயமான மர்மம்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் வருகிறது என்று 2013ம் ஆண்டிலேயே ஒருவர் டிவீட் போட்டுள்ளதாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பான டிவீட்டும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    கொரோனா குறித்த முன்பே கணித்த புத்தகங்கள், படங்கள்

    சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கி இன்று இந்தியா வரை வந்து விட்டது கொரோனா. இந்த கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவியுள்ள நாடுகளில் பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

    உலக சுகாதார அமைப்பு, உலகின் மிகப் பெரிய கொடிய நோயாக கொரோனாவை வகைப்படுத்தி அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் தற்போது கொரோனாவிடம் சிக்கித் தவிக்கின்றன. குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது கொரோனா.

    கொரோனா பரவுது கோவிலுக்கு வராதீங்க - திருப்பதி, சபரிமலை ஆலய நிர்வாகங்கள் அறிவிப்புகொரோனா பரவுது கோவிலுக்கு வராதீங்க - திருப்பதி, சபரிமலை ஆலய நிர்வாகங்கள் அறிவிப்பு

    கொரோனா பரவல்

    கொரோனா பரவல்

    கொரோனா நோய் பரவல் குறித்து அவ்வப்போது சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன. சீன ராணுவம்தான் இந்த கொரோனா வைரஸை லீக் செய்து விட்டதாக ஒரு சர்ச்சை உள்ளது. இந்த வைரஸை பயோ ஆயுதமாக அது பயன்படுத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், இதுதொடர்பான பணிகள் வூஹான் மாகாணத்தில் உள்ள அதன் ஆய்வகத்தில் நடந்து வந்ததாகவும் அங்கிருந்துதான் இது லீக் ஆனதாகவும் சர்ச்சைகள் உள்ளன.

    சீன ராணுவம்

    சீன ராணுவம்

    இதே விஷயத்தை 1981ம் ஆண்டு டீன் கூன்ட்ஸ் என்பவர் எழுதிய தி ஐஸ் ஆப் டார்க்னஸ் என்ற புத்தகத்திலும் சில வாசகங்கள் வெளிப்படுத்துகின்றன. அதில் ஹூஹான் 400 என்ற வைரஸ் குறித்து கூறப்பட்டுள்ளது. சீன ராணுவம் உருவாக்கிய பயோ ஆயுதம் குறித்து அதில் வருகிறது. அந்த வைரஸை ஹூஹான் ஆய்வகத்தில் சீன ராணுவம் உருவாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய தகவல்

    புதிய தகவல்

    இந்த நிலையில்தான் இந்த டிவீட் குறித்த தகவல் வைரஸ் போல பரவி வருகிறது. அதாவது 2013ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி மார்கோ அகோர்டஸ் என்பவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் "Corona virus....its coming" என்று குறிப்பிட்டுள்ளார். இதுதான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று பரவியுள்ள கொரோனா வைரஸ் குறித்து இவருக்கு எப்படி 2013ம் ஆண்டே தெரியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சொல்வது நிஜமா

    சொல்வது நிஜமா

    பலரும் இந்த டிவீட்டில் வந்து கமெண்ட்டுகளைக் குவித்து வருகின்றனர். இப்போது ஆட்டிப் படைத்து வரும் கொரோனா குறித்து 2013ம் ஆண்டே இவர் கூறியது எப்படி என்றுதான் பலரும் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர். இந்த நபர் 2016ம் ஆண்டுடன் டிவீட் போடுவதை நிறுத்தி விட்டார். சிலருக்கு இவர் போட்ட டிவீட் நிஜம்தானா என்ற சந்தேகமும் உள்ளது.

    டிவிட்டரை ஹேக் பண்ணிட்டீங்களா

    டிவிட்டரை ஹேக் பண்ணிட்டீங்களா

    டிவிட்டரை ஹேக் செய்து தேதியை மாத்திட்டீங்களா என்றும் சிலர் கேள்வி கேட்டுள்ளனர். காரணம், இந்த டிவீட்டை யாராலும் நம்ப முடியவில்லை. 2016ம் ஆண்டுடன் டிவீட் போடுவதை நிறுத்தியுள்ளதைப் பார்க்கும்போது இவரை யாரோ சிலர் சைலன்ஸ் ஆக்கி விட்டதாகவே தெரிகிறது என்று ஒருவர் கூறியுள்ளார். பல உண்மைகளை இவர் வெளியில் சொல்லி விடுவார் என பயந்து இதைச் செய்திருக்கலாம் என்பது இவர்களது கருத்து.

    இந்த டிவீட் எந்த வகையில் உண்மையானது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

    English summary
    A Tweet which was surfaced in 2013 has predicted the spread of Coronavirus and it is resufacing in the Internet again.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X