டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இழந்ததை மீட்க திட்டம்.. பாஜகவில் மீண்டும் பார்முக்கு வருகிறார் அத்வானி.. மோடி அப்செட்!

பாஜக கட்சியில் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக கட்சியில் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மீண்டும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருகிறது பாஜக. இதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக சில முக்கிய தலைவர்களை பாஜக மீண்டும் கட்சிக்குள் ''பார்மிற்குள்'' கொண்டு வர முடிவெடுத்து உள்ளது.

மோடி அமித் ஷா என்ன செய்தார்?

மோடி அமித் ஷா என்ன செய்தார்?

2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பாஜகவில் முன்னணி தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். முக்கியமாக அதிக வயது கொண்ட அனுபவம் கொண்ட தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டார்கள். அத்வானியை பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் சரியாக கண்டுகொள்ளவில்லை, மரியாதை அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

பாஜக பின்னடைவு

பாஜக பின்னடைவு

இந்த நிலையில் 2014 தேர்தலுக்கு பின் நடந்த எந்த தேர்தலிலும் பாஜக சரியாக செயலாற்றவில்லை. முக்கியமாக மாநில தேர்தல்கள், இடைத்தேர்தல்களில் பாஜக மிக மோசமான தோல்வியை தழுவியது. கடைசியாக நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலிலும் பாஜக மிக மோசமான தோல்வியை தழுவியது. இதனால் தற்போது பாஜக பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வருகிறது.

அத்வானி வருகிறார்

அத்வானி வருகிறார்

இந்த நிலையில்தான் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி மீண்டும் பாஜகவில் ஆக்ட்டிவாக இருக்க போகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இவருக்கு 91 வயது ஆகிறது. ஆனாலும் இவர் பாஜகவின் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்வார் என்று கூறுகிறார்கள். மற்ற தலைவர்களை விட இவருக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

தேர்தலில் நிற்கிறார்

தேர்தலில் நிற்கிறார்

அதேபோல் இவர் தேர்தலில் நிற்க போகிறார் என்றும் கூறுகிறார்கள். 2019 நாடாளுமன்ற தேர்தலில் இவர் பாஜக சார்பாக போட்டியிடுவார் என்று கூறுகிறார்கள். அதேபோல் பாஜகவில் ஓரம்கட்டப்பட்ட சில மூத்த தலைவர்களும் கட்சிக்குள் வருவார் என்று கூறுகிறார்கள். பாஜக மீண்டும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவதற்காக இப்படி செய்வதாக கூறப்பட்டுள்ளது.

என்ன நடக்கிறது

என்ன நடக்கிறது

பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவிற்கும் இந்த முடிவில் பெரிய திருப்தி இல்லை என்று கூறுகிறார்கள். ஏற்கனவே பாஜகவின் மோடிக்கு பதில் நிதின் கட்கரி முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இந்த சமயத்தில் பாஜகவில் அடுத்தடுத்த மாற்றம் நிகழ்வது பல அரசியல் கேள்விகளை எழுப்பி உள்ளது.

English summary
2019 Lok Sabha Election: BJP plans to bring back old charm and experienced hand Advani for the polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X