டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

50 சதவீத ஒப்புகைசீட்டுகளை எண்ணியே ஆகணும்.. மீண்டும் ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்.. மறுசீராய்வு மனு

Google Oneindia Tamil News

டெல்லி: ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீதம் வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 21 எதிர்க்கட்சிகள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன.

தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் (விவிபாட் மிஷினில்) வாக்கு யாருக்கு அளித்தோம் என்ற ஒப்புக்கை சீட்டுகளின் 50 சதவீதத்தை வாக்கு எண்ணிக்கையின் போது எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

21 Opposition Parties today Ask Top Supreme Court To Increase EVM Paper Trail Count

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம், ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத ஒப்புக்கை சீட்டுகளை எண்ணிணால், தேர்தல் முடிவுகள் வர சுமார் 5 நாட்கள் ஆகும் என வாதிட்டது.

இதையடுத்து உச்சநீதிமன்றம், ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது 5 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என தீர்ப்பளித்து.. மேலும் 21 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மருத்துவ நிபுணர் குழு அமைக்க கோரிய அப்பல்லோ மனு மீது வெள்ளியன்று விசாரணை.. உச்சநீதிமன்றம்மருத்துவ நிபுணர் குழு அமைக்க கோரிய அப்பல்லோ மனு மீது வெள்ளியன்று விசாரணை.. உச்சநீதிமன்றம்

இந்நிலையில் 21 எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் அனைத்து தொகுதியிலும் 50 சதவீதம் வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணக் வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

English summary
21 opposition parties today asked the Supreme Court to review its order on counting the slips of only five EVM paper
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X