டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேசிய மக்கள் தொகை பதிவேடு 2021 (NPR).. நீங்கள் இந்த ஆவணங்களை கட்டாயம் காட்ட வேண்டியதிருக்கும்

Google Oneindia Tamil News

டெல்லி: 2021ம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) உங்கள் பெயரை சேர்க்க ஆதார், ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 21 அடையாளங்களில் ஏதேனும் ஒன்றை குடும்ப தலைவர் காட்ட வேண்டியதிருக்கும். இது தொடர்பாக அரசு அறிவுறுத்தலை வழங்கும் என கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

கணக்கெடுப்புக்கு முந்தைய ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்கள் பகுதிகளில் வசித்து வந்த நம் நாட்டின் 'வழக்கமான குடிமகன்கள்' அல்லது அடுத்த ஆறு மாதங்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதியில் தொடர்ந்து தங்க விரும்பும் நபர்கள் குடிமகன்கள் இந்த மக்கள் தொகை பதிவேட்டில் சேர்க்கப்படுவார்கள்.

டார்க்கெட்டை உயர்த்திய டாஸ்மாக்.. முச்சதம் அடிக்க திட்டம்.. மதுக்கடைகளில் அலைமோதும் குடிமகன்ஸ்! டார்க்கெட்டை உயர்த்திய டாஸ்மாக்.. முச்சதம் அடிக்க திட்டம்.. மதுக்கடைகளில் அலைமோதும் குடிமகன்ஸ்!

பணமதிப்பிழப்பு

பணமதிப்பிழப்பு

இந்நிலையில் பல மாநில அரசாங்கங்கள் NPR இன் பணிகளை முடக்கியுள்ளன, தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) நோக்கிய முதல் படி என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு சமம் என்று விமர்சித்துள்ள எதிர்க்கட்சிகள், முஸ்லிம்களுக்கு எதிராக குடியுரிமை திருத்தச் சட்டத்துடன் இணைத்து பயன்படுத்தும் என்று குற்றம்சாட்டி வருகின்றன.

அமித்ஷா மறுப்பு

அமித்ஷா மறுப்பு

பிரதமர் நரேந்திர மோடி, அப்படியான எந்த நோக்கமும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார். என்.பி.ஆர் தரவு என்.ஆர்.சிக்கு பயன்படுத்தப்படாது என்றும், தற்போது வரை என்.ஆர்.சி நடத்துவதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார்..

பெற்றோர் பிறந்த இடம்

பெற்றோர் பிறந்த இடம்

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு என்பிஆர் பணிகள் குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், NPR 2020 க்காக பொதுமக்களிடம் கேட்கப்படும் கேள்விகள் வரிசையில் பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் இடம்" குறித்த கேள்விகள் இடம் பெற வாய்ப்பு உள்ளது என்றும் ஆனால் இந்த கேள்விக்கு எந்தவிதமான மோசமான அர்த்தங்களும் இல்லை என்று மறுத்துள்ளார்.

அரசுஅதிகாரி விளக்கம்

அரசுஅதிகாரி விளக்கம்

"இந்த விவரங்கள் முந்தைய NPR கணக்கீட்டின் போது பெற்றோர்கள் குறித்த ஒரு கேள்வியின் ஒரு பகுதியாக பதிவு செய்யப்பட்டதாவும் அரசு அதிகாரி கூறினார். மக்கள் தொகை கணக்கெடுப்பு சமயத்தில் பிள்ளைகளுடன் தங்கியிருக்கிறார்களா இல்லையா என்பதை அறிய பிறந்த இடம் குறித்து எங்களுக்கு ஒரு தனி கேள்வி உள்ளது என்றும் அதிகாரி விளக்கினார்.

அதுவேற என்பிஆர்

அதுவேற என்பிஆர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான அஜய் மேக்கன் என்பிஆர் படிவத்தை மாற்றுவதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். "2010 இல் உள்துறை அமைச்சராக ஆக, நான் NPR ஐ மேற்பார்வையிட்டேன்! ஆனால் மோடி- அமித்ஷா, 2020 என்.பி.ஆர் முற்றிலும் மாற்றி உள்ளார்கள் "என்று அவர் டிசம்பர் 25 அன்று ட்வீட் செய்திருந்தார்.

ஆதார் ஆவணம்

ஆதார் ஆவணம்

இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) பெயரை சேர்க்க ஆதார், ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 21 அடையாளங்களில் ஏதேனும் ஒன்றை குடும்ப தலைவர் காட்ட வேண்டியதிருக்கும் என்று கூறுகிறார்கள். மத்திய அரசு இது தொடர்பாக அறிவுறுத்தலை வழங்கக்கூடும் என்கிறார்கள்.

அதிகாரிகள் உறுதி

அதிகாரிகள் உறுதி

இதனிடையே மக்கள் தொகை கணக்கீட்டாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களால் மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி சேகரிக்கப்பட்ட தரவு பாதுகாப்பாக இருப்பதை இந்திய பதிவாளர் ஜெனரல் (ஆர்ஜிஐ) உறுதி செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சரிபார்க்கப்பட்ட அரசு தரப்பு அதிகாரிகள் மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் வழங்கிய உள்நுழைவுகள் மற்றும் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி பதிவிறக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மக்கள் தொகை பதிவேடு குறித்த தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் உறுதி தெரிவித்தனர்.

English summary
central government will launch a drive instructing the “head of the family” to make available details of 21identifiers during enrolment in the National Population Register (NPR)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X