டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10ம் கிளாஸ் படிச்சவங்களும் இருக்காங்க.. கோடீஸ்வரர்களும் இருக்காங்க... குற்றபின்னணியும் நிறைய இருக்கு

புதிதாக பொறுப்பேற்றுள்ள மோடி அமைச்சரவையில் 51 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்

Google Oneindia Tamil News

டெல்லி: கிரிமினல் வழக்கில் தொடர்புடைய 22 அமைச்சர்கள் நம்மை ஆள போகிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை!

நேத்து வீரமணி ஒரு அறிக்கையில், "தேர்தலில் தோற்றவர்களை அமைச்சர் பொறுப்புகளில் அமர்த்துவது என்பது கழிவுப் பொருள்களை மீண்டும் இலையில் பரிமாறுவதற்கு ஒப்பாகும். அவ்வளவு அறிவுப் பஞ்சமா அவர்களது அணியில்? "என்று கேட்டிருந்தார்.

வீரமணி தோற்றவர்களுக்கு சீட் தரக்கூடாது என்பதை வலியுறுத்துவதாகவே இருந்தாலும், இப்போது அமைந்திருக்கிற அமைச்சரவையை பார்த்தால் அறிவுப்பஞ்சமா என்றுதான் எல்லாருக்குமே கேட்க தோன்றுகிறது.

தேர்தல் முடிவுகளும் 'ஆடிட்டர்' குருமூர்த்தியின் 'குமாரசாமி' கணக்கும்... உண்மை இதுதான்! தேர்தல் முடிவுகளும் 'ஆடிட்டர்' குருமூர்த்தியின் 'குமாரசாமி' கணக்கும்... உண்மை இதுதான்!

ஆய்வு அறிக்கை

ஆய்வு அறிக்கை

நேற்று முன்தினம் மொத்தம் 58 பேர் மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம், அவர்கள் இதுவரைக்கும் எதிர்கொண்டுள்ள வழக்குகள் பற்றின விவரங்களை எல்லாம் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

முக்கிய அம்சம்

முக்கிய அம்சம்

அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சம் இதுதான்: 47 அமைச்சர்கள் படிச்ச பட்டதாரிகள். ஒரே ஒருத்தர் மட்டும் டிப்ளமோ படித்திருக்கிறார். மீதியிருக்கிற 8 அமைச்சர்களில் 10ம் கிளாஸ் முதல் 12ம் கிளாஸ் வரை படித்திருக்கிறார்கள்.

குற்ற வழக்கு

குற்ற வழக்கு

22 பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. 16வது மக்களவையை ஒப்பிடும்போது, இந்த மக்களவையில் குற்றவழக்குகள் கொண்ட அமைச்சர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகமாக உள்ளது. அதிலும் தீவிர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் உயர்ந்துதான் உள்ளது.

அமித்ஷா

அமித்ஷா

பதவியேற்ற அமைச்சர்களில் 51 பேர் கோடீஸ்வரர்கள். ஒவ்வொரு மந்திரிக்கும் சராசரியாக ரூ.14.72 கோடி சொத்து உள்ளது. குறிப்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ஹர்சிம்ரத் கவுர் பாதல் போன்றோருக்கு ரூ.40 கோடிக்கும் அதிகமாகவே சொத்துக்கள் உள்ளன.

13 லட்சம் ரூபாய்

13 லட்சம் ரூபாய்

கைலாஷ் சவுத்ரி, ராமேஸ்வர் தேலி போன்ற 5 அமைச்சர்களுக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக சொத்து உள்ளது. ஒடிசா அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கியிடம் வெறும் ரூ.13 லட்சம் மதிப்புள்ள சொத்து மட்டுமே இருக்கிறது" என்று அந்த அறிக்கை சொல்கிறது.

கிரிமினல் வழக்கு

கிரிமினல் வழக்கு

ஆக இந்த அறிக்கையின் மூலம் தெரியவருவது, நம்மை ஆள்பவர்கள் அமித்ஷா போல கோடீஸ்வரர்களாகவும் இருக்கிறார்கள், 10-ம் கிளாஸ் படித்தவர்களாகவும் இருக்கிறார்கள், முக்கியமாக 22 பேர் கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான்!

English summary
In new Modi Govt 51 ministers are rorepatis and 22 Ministers with criminal cases
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X