டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 3 உள்பட நாடு முழுவதும் 23 புதிய அதிவேக நெடுஞ்சாலைகள்.. 5 வருடத்தில் மாஸ் திட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் பொருளாதார வழித்தட முனையங்கள் உட்பட 23 புதிய தேசிய நெடுஞ்சாலைகளை 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) காலக்கெடு நிர்ணயித்துள்ளது,.

டெல்லி-மும்பை, அகமதாபாத்-தோலேரா மற்றும் அமிர்தசரஸ்-ஜாம்நகர் உள்ளிட்ட நான்கு அதிவேக நெடுஞ்சாலைகள் மார்ச் 2023 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 2024 க்குள் மேலும் ஒன்பது நெடுஞ்சாலைகள் தயாராகிவிடுமாம்.

2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் ஒன்பது பசுமை வழி நெடுஞ்சாலைகள் நிறைவடையும் என்று என்.எச்.ஏ.ஐ தயாரித்த ஒரு நிலை அறிக்கை காட்டுகிறது. 7,800 கி.மீ. நீளமுள்ள இந்த அதிவேக நெடுஞ்சாலைகளை உருவாக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ .3.3 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது..

ஐக்கிய அரபு அமீரகம்-இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம்.. அமெரிக்காவின் சூப்பர் வெற்றி.. பின்னணியில் பல வியூகம்!ஐக்கிய அரபு அமீரகம்-இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம்.. அமெரிக்காவின் சூப்பர் வெற்றி.. பின்னணியில் பல வியூகம்!

முக்கிய நகரங்கள்

முக்கிய நகரங்கள்

ஆறு வழிச்சலையாக அமைய உள்ள இந்த அதிவேக நெடுஞ்சாலைகள் நாடு முழுவதும் உள்ள சூரத், சோலாப்பூர், லக்னோ, விசாகப்பட்டினம், சென்னை, பெங்களூரு, விஜயவாடா, ராய்ப்பூர், கோட்டா, கரக்பூர் மற்றும் சிலிகுரி ஆகியவற்றை இணைக்கிறது. 2023 மற்றும் 2024ம் ஆண்டு முடிக்க வேண்டிய நெடுஞ்சாலை திட்டங்கள் அடுத்த ஆண்டுக்குள் ஏலம் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெங்களூரு சென்னை

பெங்களூரு சென்னை

ஆறு வழிச்சாலையாக நிறைவேற்றப்பட உள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் அது எப்போது முடிக்கப்பட உள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.

  • டெல்லி- மும்பை (1350 கிமீ) மார்ச்2023
  • அஹமதாபாத்- தோலரே (110) மார்ச் 2023
  • டெல்லி- அமிர்தசரஸ் கட்ரா (600 கிமீ) மார்ச் 2024
  • பெங்களூரு-சென்னை (272 கிமீ) மார்ச் 2024
  • கான்பூர் -லக்னோ (63 கிமீ) மார்ச் 2024
  • அம்பாலா- காட்புட்லி (310 கிமீ) மார்ச் 2023
  • அமிர்தசரஸ் ஜாம்நகர் (762) மார்ச் 2023
  • நகர்ப்புற விரிவாக்க சாலை 2 டெல்லி (75 கிமீ) மார்ச் 24
  • ராய்ப்பூர்- விசாகப்பட்டினம் (464) மார்ச் 2024
  • டெல்லி - ஷகரான்பூர் டேராடூன் (169 கிமீ) மார்ச் 2024
  • பெங்களூரு செயற்கோள் நகரம் ரிங் ரோடு (281கிமீ) மார்ச் 2024
  • சூரத் -சோலாப்பூர் (464 கிமீ) மார்ச் 2025
சித்தூர் - தச்சூர்

சித்தூர் - தச்சூர்

  • சென்னை- சேலம் (277 கிமீ) மார்ச் 2025
  • துர்க் - ராய்ப்பூர்- அராங் (92 கிமீ) மார்ச் 2024
  • சித்தூர் - தச்சூர் (125கிமீ) மார்ச் 2024
  • கராக்பூர் - சிலிகுரி (235கிமீ) மார்ச் 2025
  • சேலாப்பூர் -கர்னூல் (318 கிமீ) மார்ச் 2025
  • இந்தூர்- ஹைதராபாத் (713 கிமீ) மார்ச் 2025
  • ஹைதராபாத் - விசாகப்பட்டினம் (221 கிமீ) மார்ச் 2025
  • கோட்டா- இந்தூர் (136 கிமீ) மார்ச் 2024
  • ஹைதராபாத்- ராய்ப்பூர் (330 கிமீ) மார்ச் 2025
  • நாக்பூர்- விஜயவாடா (457கிமீ) மார்ச் 2025
50 சதவீதம் குறையும்

50 சதவீதம் குறையும்

புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் எப்படி இருக்கும் என்றால் , தற்போதுள்ள நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் வழக்கமான முறையிலிருந்து மிகப்பெரிய மாற்றம் கொண்டது. கனரக வாகனங்கள் உட்பட மக்கள் மற்றும் சரக்குகளின் தடையற்ற இயக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த சாலைகள் அமைக்கப்பட உள்ளது. தற்போது, இந்தியாவில் சரக்கு வாகனங்கள் ஒரு நாளைக்கு சுமார் 400 கி.மீ தூரம் செல்கின்றன. இது உலக தரத்தை விட 50% குறைவு ஆகும். இந்த புதிய சாலைகள் செலவு மற்றும் நேரத்தை 50% வரை குறைக்க வாய்ப்பு உள்ளது.

Recommended Video

    Chennai Ammonium Nitrate Stock Will be Moved | Oneindia Tamil
    சுங்கச்சாவடி மூலம் வசூல்

    சுங்கச்சாவடி மூலம் வசூல்

    நிதி நெருக்கடி இல்லை என்பதை உறுதிப்படுத்த, NHAI இந்த திட்டங்களுக்கு நிதியளிக்க சிறப்பு நோக்க வாகனங்கள் இணைப்பு வசதி (SPV ) அமைக்கப்பட உள்ளது. இந்த வசதி முதல்முறையாக. டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலையில் அமைக்கப்பட உள்ளது. திட்டத்தில் செய்யப்படும் முதலீடு சுங்கவரி (டோல்கடட்ணம் மூலம்) வசூலில் இருந்து மீட்கப்படும், இந்த சாலைகளில் 15-20 ஆண்டுகளாக சுங்கச்சாவடி உரிமையை ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஏலம் விடப்பட உள்ளது.. இதற்கு டோல் ஆபரேட் அண்ட் டிரான்ஸ்ஃபர் (TOT) என பெயரிடப்பட்டுள்ளது. "இந்த மாதிரி வெற்றிகரமாகிவிட்டால், பிற முக்கிய நெடுஞ்சாலை திட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தலைவர் எஸ் எஸ் சந்தூர் கூறினார்.

    English summary
    The National Highways Authority of India (NHAI) has set the timeline for 23 new highways which will be ready by March 2025.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X