டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நியூ இயரில் ஒரு ஹேப்பி நியூஸ்.. டிவி, கம்ப்யூட்டர்களின் விலை குறைகிறது.. இன்று அமல்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜிஎஸ்டி வரி விகிதம் மூலம் டிவி, கம்ப்யூட்டர், டிஜிட்டல் கேமரா உள்ளிட்ட 23 பொருட்களின் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 வகைகளில் வரி சதவீதத்தை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

23 products to get cheaper from today as GST cut off

வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் கூடி விவாதித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி 31-ஆவது கூட்டம் நடைபெற்றது.

23 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்கவும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. அதிகபட்சமாக விதிக்கப்படும் 28 சதவீத வரி விகிதத்துக்குள் ஆடம்பர பொருட்கள், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள், சிமெண்ட், பெரிய திரையுடன் கூடிய தொலைக்காட்சி பெட்டி, ஏ.சி., பாத்திரம் கழுவும் எந்திரம் ஆகியவை மட்டும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளின் வாகன பொருட்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சரக்கு வாகன 3-ம் நபர் காப்பீட்டுத் தொகை மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.

ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ரூ.100-க்கும் கூடுதலாக இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

32 அங்குலம் வரை கொண்ட டி.வி. பெட்டி, கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. 23 பொருட்களின் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

English summary
In a New Year gift to the common man, the government has notified reduction in GST rates on 23 goods and services, including movie tickets, TV and monitor screen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X