டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படி பைக் ஓட்டியதே குற்றம் தான்.. 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீஸ்.. அதிர்ச்சி

Google Oneindia Tamil News

டெல்லி: இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு டெல்லி அருகே குருகிராம் போலீசார் போக்குவரத்து விதிமீறலுக்காக 23 ஆயிரம் அபராதம் விதித்து அதிர வைத்துள்ளார்கள்.

சமீபத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கு அதிக அபராதம் விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த விதிகளின் படி போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு தற்போது உள்ளதைவிட 10 மடங்கு அதிகமான அபராதம் நாடு முழுவதும் விதிக்கப்படுகிறது.

₹23000 fine for multiple traffic violations , Offence include driving without license, driving without RC,

இந்த சட்டத்தை தமிழகத்தில் இன்னும் போலீசார் முழுமையாக அமல்படுத்தவில்லை. அதேநேரம் சென்னையில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் அபராதங்களுக்கு பயந்து பலரும் ஹெல்மட் போட ஆரம்பித்துள்ளார்கள். அதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் குறைந்தால், ஏன் குடிப்பதே குறைந்தால் மிக்க மகிழ்ச்சி தான்.

சரி இப்போது விஷயத்துக்கு வந்திடுவோம். போக்குவரத்து விதிகளை மீறுவோரை வளைத்துப் பிடிப்பதில் நம்மூர் போலீசார் தான் கில்லாடிகள் என்று நினைத்தால் டெல்லி போலீசாரும் பலே பலே தான்.

டெல்லியின் புறநகர் பகுதியான குருகிராமில் போக்குவரத்து போலீசார் அண்மையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி பிடித்து 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள்.

அப்படி என்னென்ன விதிமீறல் என்று பார்த்தால், வண்டி ஓட்டி வந்தவர் ஹெல்மெட் போடவில்லை, இரண்டாவதாக அவரிடம் ஆர்சி புக் இல்லை. மூன்றாவதாக லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். 4வதாக இன்சூரன்ஸ் இல்லை உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த இளைஞருக்கு 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் குருகிராம் போலீசார் விதித்த முதல் பெரிய அபராதம் இதுதான் என்கிறார்கள் அந்த ஊர்காரர்கள்.

English summary
the first Big challan by Gurugram Police: A two wheeler has been challaned in Gurugram for Rs. 23000. Offence include driving without licence, driving without RC, without helmet and no third party insurance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X