டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

53 நாடுகளில் இந்தியர்கள் கொரோனாவால் பாதிப்பு.. எத்தனை ஆயிரம் பேருக்கு பாதிப்பு.. விவரம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவை தவிர்த்து 53 நாடுகளில் 3,336 இந்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி வெளிநாட்டில் பாதிக்கப்பட்ட இந்தியர்களில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்கிறது இந்தியா

    இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,759 ஆக உயர்ந்துள்ளது . இதில் 10,824 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற வருகிறார்கள் . 1514 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 420 பேர் நாடு முழுவதும்கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    3,336 Indians infected coronavirus in 53 countries, 25 deaths abroad: Source

    நாட்டிலேயே மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 3202 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக லாக்டவுன் செய்யப்பட்டுள்ளதால் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால வெளிநாடுகளில் வசிக்கும் பல இந்தியர்கள் இன்னமும் அந்தந்த நாடுகளில் தான் வசிக்கிறார்கள். அப்படி வசிக்கும் பல்லாயிரம் இந்தியர்களில் ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஸ்கேன் சென்டரில் பரிசோதிக்கும் மருத்துவருக்கு கொரோனா .. இப்போது 62 கர்ப்பிணிகள் தனிமையில்! ஸ்கேன் சென்டரில் பரிசோதிக்கும் மருத்துவருக்கு கொரோனா .. இப்போது 62 கர்ப்பிணிகள் தனிமையில்!

    இநதியாவை தவிர 53 நாடுகளில் 3,336 இந்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி வெளிநாட்டில் பாதிக்கப்பட்ட இந்தியர்களில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் இந்தியாவில் இருந்து 38 நாடுகளைச் சேர்ந்த 35000 வெளிநாட்டினரை இந்தியா திருப்பி அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English summary
    A total of 3,036 Indians have been infected by coronavirus in 53 countries while 25 died of it abroad, say govt sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X