டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜ்யசபாவில் கடும் அமளி... கூச்சலிட்ட ஆம் ஆத்மி எம்.பிக்கள் மூவர் சஸ்பெண்ட்

ராஜ்யசபாவில் கடும் அமளியில் ஈடுபட்டு கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 3 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜ்யசபாவில் முழக்கமிட்டு கடும் அமளியில் ஈடுபட்டதால் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் சஞ்செய் சிங், என்.டி குப்தா மற்றும் சுஷில் குப்தா ஆகிய மூன்று பேரையும் இன்று சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளில் இருந்தே வேளாண் சட்ட விவகாரத்தை எதிர்கட்சி எம்பிக்கள் கையில் எடுத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக அவை செயல்படாமல் முடங்கியது.

3 Aam Aadmi Party MPs resort to sloganeering, suspended for a day in Rajya Sabha

ராஜ்யசபாவில் நேற்று கடும் அமளி துமளி ஏற்பட்டது. இதனால், சில முறை ஒத்திவைக்கப்பட்டு பின், நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு நேற்று அறிவித்தார்.

இன்று காலை அவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டது. அவை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை கூடுதல் நேரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் அப்போது விவசாயிகள் பிரச்சினை குறித்தும் எழுப்பலாம் என்றும் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

1979க்கு பிறகு.. ஈரான் பாதுகாப்பு அமைச்சர் வருகை.. மறுபக்கம் அமெரிக்கா.. பெங்களூர் மீது மொத்த கவனம்!1979க்கு பிறகு.. ஈரான் பாதுகாப்பு அமைச்சர் வருகை.. மறுபக்கம் அமெரிக்கா.. பெங்களூர் மீது மொத்த கவனம்!

அதையும் ஆம் ஆத்மி கட்சி எம் பிக்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் சஞ்செய் சிங், என்.டி குப்தா மற்றும் சுஷில் குப்தா ஆகிய மூன்று பேரையும் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

English summary
Three Aam Aadmi Party MPs in Rajya Sabha have been suspended from attending the House proceedings for rest of the day. The MPs are Sanjay Singh, Narain Dass Gupta and Sushil Kumar Gupta.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X