டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அஜித் தோவல், போலீஸ் கமிஷனர் கார் முன்னாடியே இப்படியா.. டெல்லி ஷாக்கிங் படம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில், காவல்துறை, தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டதா என்று கேள்வி எழும்பும் நிலையில் இருக்கிறது இந்த புகைப்படத்தை பார்த்தால்.

டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவானவர்கள் மற்றும் எதிரானவர்கள் நடுவே பெரும் மோதல் வெடித்துள்ளது.

3 men on a motorbike with Lathi, chanting Jai Shree Ram barge into the cavalcade of NSA Ajit Doval

இதையடுத்து ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் வலதுசாரி அமைப்பினர் பலரும் டெல்லியில் வன்முறையில் ஈடுபடுவதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியவண்ணம் உள்ளன.

இந்த மோதல்களில் பலியானோர் எண்ணிக்கை சுமார் 20ஐத்தொட போகிறது. இந்த நிலையில்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று இரவு, வட கிழக்கு டெல்லி பகுதியிலுள்ள சீலாம்பூர் சென்று ஆலோசனையில் ஈடுபட்டார். வட கிழக்கு டெல்லி பகுதிதான் கலவரத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது, எனவே அஜித் தோவல் நேரடியாக அங்கு சென்றார். துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டத்திற்கு அவர் ஏற்பாடு செய்து இருந்தார்.

டெல்லி எரிகிறது.. ரஜினி எங்கே.. தொப்பி போடாத முஸ்லீம் ராமதாஸ் எங்கே.. எம்பி செந்தில்குமார் கேள்விடெல்லி எரிகிறது.. ரஜினி எங்கே.. தொப்பி போடாத முஸ்லீம் ராமதாஸ் எங்கே.. எம்பி செந்தில்குமார் கேள்வி

துணை கமிஷனர்கள் மட்டுமின்றி டெல்லியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு போலீஸ் கமிஷனர் ஸ்ரீவத்ஸவா ஆகியோரும் அந்த மீட்டிங்கில் கலந்து கொண்டனர். இதில் கொடுமை என்னவென்றால் அஜித் தோவல் இந்த ஆலோசனை கூட்டத்திற்காக காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, அவரது பாதுகாப்பு வாகனங்களை தாண்டி மோட்டார் சைக்கிளில் 3 பேர் கையில் உருட்டுக் கட்டைகளுடன் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்துடன் சென்றுள்ளனர்.

இது புகைப்படமாக தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது. ஊரடங்கு உத்தரவு, கண்டதும் சுட உத்தரவு என இருக்கும் ஒரு இடத்தில் அவர்களால் இப்படி சுதந்திரமாக சுற்றிச் செல்ல முடிகிறது. டெல்லி போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் சென்றபோது அவர்களைத் தாண்டி இவ்வாறு வன்முறையாளர்கள் எளிதாகச் செல்ல முடிகிறது என்றால் அங்கே சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா, காவல்துறை என்ன செய்கிறது என்பது போன்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்புகிறார்கள்.

English summary
Despite “curfew”, “shoot at sight” orders in place, 3 men on a motorbike with Lathi, chanting Jai Shree Ram barge into the cavalcade of NSA DOVAL while he was taking stock of situation in NE Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X