டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்க பக்கா காங்கிரஸ்காரங்க.. யூ டர்ன் அடிக்கும் 3 சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: நாங்கள் உண்மையான காங்கிரஸ்காரர்கள். நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கடமைப்பட்டுள்ளோம் என சச்சின் பைலட்டின் கூடாரத்தில் இருந்த 3 எம்எல்ஏக்கள் தற்போது திடீரென தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவம் ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்த பரபரப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய பிரதேசத்திற்கு பின்னர் தற்போது ராஜஸ்தான் அரசியலிலும் புயல் கிளம்பியுள்ளது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நடந்து வந்த பனிப்போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 102 எம்எல்ஏக்கள் ஆதரவு?.. ஆளுநரை சந்திக்கும் திட்டத்தில் அசோக் கெலாட்.. மீட்டிங்கில் நடந்தது என்ன? 102 எம்எல்ஏக்கள் ஆதரவு?.. ஆளுநரை சந்திக்கும் திட்டத்தில் அசோக் கெலாட்.. மீட்டிங்கில் நடந்தது என்ன?

கூட்டம்

கூட்டம்

இந்த நிலையில் சச்சின் பைலட் தனக்கு ஆதரவாக உள்ள 30 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இன்று ராஜஸ்தான் காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதில் கலந்து கொள்ளாமல் டெல்லியில் இவர்கள் முகாமிட்டுள்ளது அரசியல் களத்தில் பல்வேறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

இந்த நிலையில் சனிக்கிழமை டெல்லிக்கு சென்ற 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் திரும்பியுள்ளனர். அவர்கள் அங்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் ஒற்றுமையாக உள்ளது. நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் உண்மையான காங்கிரஸ்காரர்கள் என தெரிவித்துள்ளார்கள்.

3 எம்எல்ஏக்கள்

3 எம்எல்ஏக்கள்

டெல்லிக்கு சென்றது குறித்து அந்த 3 எம்எல்ஏக்களில் ஒருவரான ரோஹித் போரா கூறுகையில், அது எங்கள் தனிப்பட்ட விவகாரம் என்றார். பைலட் சச்சினுக்கு 19 எம்எல்ஏக்கள் உள்ளனர். 16 பேர் சொந்த கட்சியினர், மீதமுள்ள 3 பேர் சுயேச்சைகள் உள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த தேர்தலின் போது ரேஸில் இருந்தும் முதல்வர் பதவியை இழந்தவர் சச்சின் பைலட்.

சச்சின்

சச்சின்

இவர் லாக்டவுன் தொடங்குவதற்கு முன்பிருந்தே பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவருக்கு 30 முதல் 35 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் சச்சினுக்கு முதல்வர் பதவியை தர பாஜக ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் சச்சின் பைலட்டுடனான பேச்சுவார்த்தையை பாஜக மறுக்கிறது. இந்த நிலையில் சச்சின் பைலட்டின் கூடாரத்தில் இருந்த 3 எம்எல்ஏக்கள் யூ டர்ன் அடித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
3 MLAs in Sachin Pilot's camp says that we are congress men. These 3 had gone to Delhi with Sachin Pilot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X