டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

30,000 ப்ரூ இன மக்களுக்கு திரிபுராவில் நிரந்தர இடம்.. நலத்திட்டங்கள்.. அமித் ஷா அதிரடி அறிவிப்பு

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ப்ரூ இன அகதிகளுக்கு திரிபுராவில் நிரந்தர இடம் அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ப்ரூ இன அகதிகளுக்கு திரிபுராவில் நிரந்தர இடம் அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ப்ரூ இனம் என்பது 21க்கும் மேற்பட்ட உட்பிரிவுகளை கொண்ட திரிபுராவை மையமாக கொண்ட பழங்குடி இனக்குழு ஆகும். இவர்களில் சில பிரிவு மக்கள் பல வருடங்களாக தனி மாவட்ட கோரிக்கையை திரிபுராவில் வைத்து வந்தனர். இதனால் அவ்வப்போது இவர்களுக்குள் கலவரம் ஏற்படுவது வழக்கம்.

30,000 Bru tribes will get permanents settlement in Tripura says, Amit Shah

அந்த வகையில் 1997 ப்ரூ இனக்குழுவில் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர்களில் பலர் மிசோரம் மற்றும் அசாம் எல்லையில் குடியேறினார்கள். அப்போது 50 ஆயிரம் பேர் குடியேறியதாக கூறப்பட்டது. இவர்கள் எல்லோரும், வடகிழக்கு மாநில சட்டப்படி அகதிகளாக அறிவிக்கப்பட்டனர்.

அதேபோல் இவர்கள் எல்லோரும் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டனர். இத்தனை வருடங்களாக அகதிகள் முகாமில் இருந்ததாலும், போதுமான மருத்துவ வசதி இல்லாத காரணத்தாலும் இவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரமாக குறைந்துள்ளது.

சந்தேகம் வருகிறது.. தாவிந்தர் சிங் யாருடைய உத்தரவின் கீழ் பணியாற்றினார்?.. பிரியங்கா காந்தி கேள்வி!சந்தேகம் வருகிறது.. தாவிந்தர் சிங் யாருடைய உத்தரவின் கீழ் பணியாற்றினார்?.. பிரியங்கா காந்தி கேள்வி!

இந்த நிலையில் மிசோராமில் இருக்கும் இவர்கள் எல்லோரையும் திரிபுராவில் குடியேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ப்ரூ இன அகதிகளுக்கு திரிபுராவில் நிரந்தர இடம் அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மிசோரம் முதல்வர் சோரம்தங்கா, திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இவர்களுக்கு திரிபுராவில் நிரந்தர வீடு வழங்கப்படும். இதற்காக 600 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என்று அரசு கூறியுள்ளது.

அதேபோல் எல்லா குடும்பத்திற்கும் 40/30 அடி நிலம் அளிக்கப்படும். குடும்பம் ஒன்றுக்கு 4 லட்சம் ரூபாய் நிரந்த வைப்புத்தொகை அளிக்கப்படும். மாதம் இவர்களுக்கு 5000 ரூபாய் என்று 2 வருடங்களுக்கு வழங்கப்படும். இலவச அங்காடி வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனால் 22 வருடமாக நிலவி வந்த ப்ரூ இன மக்களின் பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
30,000 Bru tribes will get permanents settlement in Tripura says, Amit Shah in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X