டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் கொரோனா பாதித்து மீண்டுள்ளனர்.. மருத்துவக் குழு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் கொரோனா பாதிக்கப்பட்டு அவர்கள் மீண்டதாக விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அடங்கிய குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வைரஸின் தாக்கம், பாதிப்பு, வருங்காலத்தில் வைரஸின் பரவல் குறித்து கண்டறிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஒரு குழுவை மே மாதம் அமைத்தது.

அந்த குழுவில் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வைரஸின் நிலை குறித்து விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.

இந்தியாவில் சிறிய அளவில் கொரோனா சமூக பரவல்.. 9 மாதங்களில் முதல் முறையாக ஒப்புக் கொண்ட மத்திய அரசுஇந்தியாவில் சிறிய அளவில் கொரோனா சமூக பரவல்.. 9 மாதங்களில் முதல் முறையாக ஒப்புக் கொண்ட மத்திய அரசு

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

நாடு முழுவதும் லாக்டவுன் நேரத்திலும், புலம்பெயர்ந்தபோதும் கொரோனா பரவல் எப்படியிருந்தது என்பது குறித்து மருத்துவக் குழுவினர் ரியல் டைம் தகவல்களை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அது போல் நாடு முழுவதும் அன்லாக் நடவடிக்கையின் அடிப்படையில் எதிர்காலத்தில் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்தியா

இந்தியா

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்தது. எனினும் அது தளர்வுகளால் ஏற்பட்ட உச்சம் இல்லை. இந்திய மக்கள் தொகையில் 30 சதவீதம் பேருக்கு ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளன. அவ்வாறு எனில் இந்திய மக்கள்தொகையில் 30 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டனர் என்பது பொருள்.

66 லட்சம்

66 லட்சம்

ஆகஸ்ட் மாதம் இறுதியில் 14 சதவீதம் பேருக்கு ஆன்டிபாடிகள் உருவாகியிருக்கக் கூடும். தற்போது 66 லட்சம் பேருக்கு அறிகுறியுடன் கூடிய கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஏன் சரிந்துள்ளது, ஏன் தொடர்ந்து சரிவில் இருக்கிறது, மே மற்றும் ஜூன் மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறிய போது ஏன் கொரோனா அதிகரிக்கவில்லை என்பது குறித்த கேள்விகளுக்கு அந்த குழுவிடம் பதில் இல்லை.

தொற்று எண்ணிக்கை

தொற்று எண்ணிக்கை

லாக்டவுன் போடப்படாதிருந்தால் உண்மையில் ஜூன் மாதத்தில் இருந்த கேஸ்களை விட 14 மடங்கு அதிகரித்திருக்கும் என குழு கூறுகிறது. லாக்வுடன் மட்டும் அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் இந்தியாவில் நோய் தொற்று எண்ணிக்கை விண்ணை தாண்டியிருக்கும் என்று அக்குழு கூறுகிறது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, ஒடிஸா, பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறியபோதும் கொரோனா பாதிப்பு அதிகமாக பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது அந்த குழு. இதுகுறித்து அந்த குழுவிடம் கேட்டபோது , அது ஏன் என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்யவில்லை என்கிறார்கள்.

English summary
Government panel says that 30 percentage of India's population has developed antibodies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X