டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி

13 மணி நேரமாக வலியிலேயே துடித்து உயிரிழந்துள்ளார் கர்ப்பிணி ஒருவர்

Google Oneindia Tamil News

டெல்லி: நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கிட்டத்தட்ட 13 மணி நேரமாக பிரசவ வலியால் துடித்து துடித்தே உயிரிழந்த சம்பவம் டெல்லி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி குறைவாக உள்ளதால் கர்ப்பிணியை அட்மிட் செய்து கொள்ள செய்யவில்லை என கூறப்படுகிறது.. இதனால் கர்ப்பிணியின் உயிர் ஆம்புலன்சிலேயே பரிதாபமாக பிரிந்ததுடன், சிசுவும் சேர்ந்து உயிரிழந்தது.

இந்தியாவில் தொற்று எண்ணிக்கையில் உத்திரபிரதேசம் தொடர்ந்து மிரட்டி வருகிறது.. டெல்லியையும் விட்டுவைக்காத வைரஸ், பெரும் கலக்கத்தை அங்கு தினந்தோறும் ஏற்படுத்தி வருகிறது.

தலைநகரில் இதுவரை 25,004 பேருக்கு கொரோனாதொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.. மேலும் 650 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

என்ன கொடுமை பாருங்க.. கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவில் வெடிகுண்டு.. வாய் வெடித்து துடித்த பரிதாபம்என்ன கொடுமை பாருங்க.. கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவில் வெடிகுண்டு.. வாய் வெடித்து துடித்த பரிதாபம்

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

அதனால் டெல்லி ஆஸ்பத்திரிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.. கொரோனா அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது என்றும், வயதானவர்கள் இருந்தால் அவர்களில் சிலரை திருப்பி அனுப்பப்படுவதாகவும் 4 நாட்களுக்கு முன்பே ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்துதான் டெல்லி அரசு திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

நீலம்

நீலம்

எனினும் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அதிகமாகவே உள்ளது.. இந்நிலையில், நொய்டாவில் ஒரு கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது. அந்த பெண்ணின் பெயர் நீலம்.. 30 வயதாகிறது.. 8 மாத கர்ப்பிணி.. இவரது கணவர் பெயர் விஜயேந்திரன்.. இந்நிலையில் நீலத்துக்கு திடீரென பிரசவ வலி ஏற்படவும் ஒரு ஆம்புலன்ஸை வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு அருகில் இருந்த சென்றுள்ளனர்.. ஆனால் நீலத்தை அங்கு அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.. அங்கேயும் அவரை சேர்த்து கொள்ளவில்லை.. இப்படியே ஒரு அரசு ஆஸ்பத்திரி உட்பட 10-க்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு கர்ப்பிணியை இழுத்து சென்றுள்ளனர். இப்படியே ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு மற்றொரு ஆஸ்பத்திரிக்கு செல்லும்போது, வழியிலேயே நீலம் உயிர் பிரிந்தது.. கிட்டத்தட்ட 13 மணி நேரம் கர்ப்பிணி வலியால் துடித்தபடியே இருந்துள்ளார் அவர்.

மறுப்பு

மறுப்பு

கடைசிவரை மருத்துவம் கிடைக்கும் என்றும் நம்பிக் கொண்டிருந்திருக்கிறார்.. எல்லா ஆஸ்பத்திரிகளிலும் படுக்கை வசதி இல்லை என்று சொல்லியே அனுமதிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.. அவர்கள் சென்ற ஆஸ்பத்திரிகள் அனைத்துமே மிக மிக பிரபலமான மருத்துவமனைகள் ஆகும். தாய் உயிரிழந்ததால, வயிற்றில் இருந்த அவரது சிசுவும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது... இதையடுத்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

கர்ப்பிணி

கர்ப்பிணி

நொய்டாவில் ஆஸ்பத்திரிகள் கர்ப்பிணியை அட்மிட் செய்யாததால் உயிரிழந்த சம்பவம் டெல்லி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. இதையடுத்து நீலத்தின் கணவர் கலெக்டரிடம் புகார் தந்ததையடுத்து, கர்ப்பிணியின் மரணம் குறித்து விசாரிக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அட்மிட் செய்ய மறுக்கப்பட்ட 8 மருத்துவமனைகள் மீதும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

முதியவர் பலி

முதியவர் பலி

ஏற்கனவே 80 வயதான கொரோனா நோயாளி ஒருவரை, டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்து விட்ட நிலையில், அந்த பெரியவர் இறந்தே விட்டார்.. அது தொடர்பாகவும் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.. இந்நிலையில் அதேபோல கர்ப்பிணி மரணமும் நிகழ்ந்துள்ளது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Pregnant woman dies in ambulance after running between hospitals for 13 hours in delhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X