டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செங்கடலாக மாறிய டெல்லி.. தலைநகரில் திரண்ட 4 லட்சம் விவசாயிகள்.. மத்திய அரசு அதிர்ச்சி!

டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் காரணமாக தலைநகர் செங்கடலாக மாறியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்- வீடியோ

    டெல்லி: டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் காரணமாக தலைநகர் செங்கடலாக மாறியுள்ளது.

    டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படுகிறது. இன்னும் சில மணி நேரத்தில் விவசாயிகள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட இருக்கிறார்கள்.

    மொத்தம் 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடக்கிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கஜா புயல் உள்ளிட்ட இயற்கை சேதங்களால் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும், விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை வைக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    [நாடாளுமன்றம் நோக்கி ஒரு லட்சம் விவசாயிகள் பேரணி.. உச்சகட்ட பரபரப்பில் டெல்லி]

    மாநிலம்

    மாநிலம்

    மொத்தம் 29 மாநிலங்களில் இருந்து விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்து இருக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள்தான் அதிகம் வந்துள்ளனர். இதில் முக்கால்வாசி பாஜக ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    இந்த போராட்டத்தில் இன்று மாலைக்குள் மொத்தம் 5 லட்சம் பேர் கூட இருக்கிறார்கள். இப்போது அங்கு ராம்லீலா மைதானத்தில் 3ல் இருந்து 4 லட்சம் பேர் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 30 ஆயிரம் போலீசார் வரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    ஆதரவு அளிக்கிறார்கள்

    ஆதரவு அளிக்கிறார்கள்

    இந்த போராட்டத்திற்கு இந்தியா முழுக்க உள்ள விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. இது இல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு பெரிய பலத்தை அளித்துள்ளது.

    செங்கடலாக மாறியுள்ளது

    செங்கடலாக மாறியுள்ளது

    இந்த போராட்டத்தால் டெல்லி தற்போது செங்கடலாக மாறியுள்ளது. விவசாயிகள் எல்லோரும் வெவ்வேறு நிறத்தில் கொடி, உடையும் அணிந்து இருந்தாலும் எல்லோரும் செந்நிற தொப்பி அணிந்து இருக்கிறார்கள். 4 லட்சம் பேர் அங்கு திரண்டு இருப்பதால், டெல்லியே செம்மையாக காட்சி அளிக்கிறது. இத்தனை பேர் போராட்டத்தில் கலந்து கொண்டு இருப்பது டெல்லிவாசிகளுக்கு சிலிர்ப்பை அளித்துள்ளது.

    English summary
    4 Lakhs plus Farmers gathered in Delhi for the massive protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X