டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடக அரசியலில் அடுத்து என்ன..? இந்த 4 விஷயங்களில் ஒன்றுதான் நடக்கும்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka political crisis | முதல்வர் பதவியை விட மாட்டேன்: குமாரசாமி திட்டவட்டம்- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வரும் நிலையில், கர்நாடக அரசு நிலைக்குமா, கவிழுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இன்று காலை வரையிலான தகவல் படி, கூட்டணி கட்சிகளை சேர்ந்த மொத்தம் 16 எம்எல்ஏக்கள், பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதில் 13 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். எஞ்சிய மூவர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர்.

    நிலைமை படுமோசமாக சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில், அரசியலில் அடுத்து எந்த மாதிரி சூழ்நிலைகளும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுவது இயல்பானதே.

    '2 அடி நடந்தா கேலரிக்கு போயிடலாம்'2 அடி நடந்தா கேலரிக்கு போயிடலாம்".. லோக்சபாவில் அரட்டை அடித்த எம்பிக்களிடம் சபாநாயகர் டென்சன்

    ஆட்சி தப்பிக்கும்

    ஆட்சி தப்பிக்கும்

    முதல் ஆப்ஷன் இதுதான்: 16 எம்எல்ஏக்களில், பெரும்பான்மையோர் தங்களது ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டாலும், அல்லது இவர்களை சபாநாயகர் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்தாலோ, கூட்டணி ஆட்சி தப்பிப்பிழைக்கும். ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் , அவ்வளவு எளிதாக அனைத்து எம்எல்ஏக்களையும், தகுதி நீக்கம் செய்வது என்பது இந்தச் சூழ்நிலையில் சபாநாயகருக்கு சிரமமான காரியம்தான்.

    பாஜக ஆட்சி

    பாஜக ஆட்சி

    ஒருவேளை அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், 105 சட்டசபை உறுப்பினர்கள் பலம் கொண்ட பாஜக, இரு சுயேச்சைகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ஒருவர் ஆகியோரின் ஆதரவுடன் அரசு அமைக்க தகுதி பெற்றுவிடும். ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது.

    உச்சநீதிமன்றம் தலையீடு

    உச்சநீதிமன்றம் தலையீடு

    தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில், 10 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளதால், ஒருவேளை பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையை கூட்டுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்புள்ளது. அப்படி செய்தாலும், ஆட்சி கலைவதற்கான வாய்ப்பு தான் அதிகமாக உள்ளது.

    வேகமாக ராஜினாமா

    வேகமாக ராஜினாமா

    ஒருவேளை, அதிருப்தி எம்எல்ஏக்கள், ராஜினாமா கடிதங்களில் சிலவற்றை சபாநாயகர் ஏற்றுக் கொண்டு விட்டால், அதன் பிறகு சுயேச்சைகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ, பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன் வராவிட்டால்.. என இவ்விரு விஷயங்களும் ஒரே மாதிரி நடந்தால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இருக்காது. அப்படியான சூழ்நிலையில், கர்நாடகாவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யும் வேகத்தை பார்த்தால், சுயேச்சைகள் ஆதரவின்றி, இயல்பாகவே பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பலத்தை பிடித்து விடும் என்றுதான் தெரிகிறது.

    கர்நாடக சட்டசபை பலம்

    கர்நாடக சட்டசபை பலம்

    கர்நாடக சட்டசபையின் மொத்த பலம் 224 தொகுதிகள். 16 பேர் அதில் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், சட்ட சபையின் மொத்த பலம் 208 என்ற அளவில் சரிவடைந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பலம் என்று எடுத்துக்கொண்டால் 105. பாஜகவின் எம்எல்ஏக்கள் பலமும் அதுதான். எனவே ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதன் மூலம், உட்கார்ந்த இடத்திலேயே பாஜகவுக்கு ஆட்சி தேடி வரப் போகிறது என்பதுதான் தற்போதைய நிதர்சனம்.

    English summary
    There are 4 possible scenarios will rise in Karnataka politics. Here is the detail of those things.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X