டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரம்ப், ஒபாமா, கிளிண்டன், சிறிசேனா.. முக்கிய தலைவர்களுக்கு கொலை மிரட்டல்.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

டெல்லி: உலக நாடுகளில் உள்ள சில முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்ய முயற்சி நடப்பதும், கொலை மிரட்டல் விடுக்கப்படுவதும் வழக்கம் ஆக்கியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல முக்கிய தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சில நாட்டு அதிபர்களை கொலை செய்ய வேறு சில நாடுகள் முயற்சி செய்கிறது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு பின்பெல்லாம் யார் இருக்கிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. இது உலக நாடுகளை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

கிளிண்டன் குடும்பம்

கிளிண்டன் குடும்பம்

அமெரிக்காவில் முதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கிளிண்டன் வீட்டில் கிடைத்த வெடிகுண்டுதான். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோர் வசித்து வரும் நியூயார்க் புறநகர் வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுகளை யார் வைத்தது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஒபாமாவிற்கு பார்சல்

ஒபாமாவிற்கு பார்சல்

ஆனால் இந்த அதிர்ச்சி முடியும் முன் அதே நாளில் இன்னொரு சம்பவம் நடந்தது. அதே நாளில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வீட்டிற்கு வெடி பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதை அனுப்பியதும் யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

அதிபர் டிரம்ப்

அதிபர் டிரம்ப்

இந்த நிலையில்தான் கடந்த வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தி வரும் ஐபோனில் இருந்து சீனா தகவல்களை ஹேக் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. சீனா அமெரிக்க அதிபரின் அலுவலக உரையாடல்களை திருடி இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் ஐபோனில் இருக்கும் சில பாகங்கள் சீனாவில் தயாரானது. அவரை கொலை செய்வதற்காக சீனா செயல்படுவதாக அமெரிக்க பத்திரிக்கைகள் எழுதியுள்ளது.

இலங்கை அதிபர்

இலங்கை அதிபர்

இந்த நிலையில் ஆசியா மொத்தத்தையும் பரபரப்பிற்கு உள்ளாக்கியது, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் எதிரான கொலை முயற்சி குற்றச்சாட்டுதான். அவரை இந்தியா கொலை செய்ய முயற்சி செய்வதாக இலங்கை அரசு கடந்த வாரம் குற்றச்சாட்டு வைத்தது. இந்தியாவின் உளவு அமைப்பான ரா அமைப்பு, அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொல்ல திட்டமிட்டது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

என்ன நடக்கிறது

என்ன நடக்கிறது

இந்த அனைத்து சம்பவங்களும் கடந்த ஒரே வாரத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நிகழ்கால அதிபரும், கடந்த கால அதிபர்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிக முக்கியமாக இதற்கு எல்லாம் பின்னணியில் சீனா இருக்கிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

English summary
4 World leaders faced assassination warning in last 7 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X