டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனவால் இந்தியாவில் 41 லட்சம் இளைஞர்கள் வேலை இழப்பு- ஐ.எல்.ஓ.- ஆசிய வளர்ச்சி வங்கி

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவால் இந்தியாவில் 41 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர் என்று ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (IL0), ஆசிய வளர்ச்சி வங்கியின் கூட்டறிக்கை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த லாக்டவுன் பல்வேறு கட்டங்களாக தளர்த்தப்பட்டும் வருகிறது. ஆனால் இன்னமும் நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

41 lakh youth lose jobs in India due to Corona- ILO,ADB

இந்த கொரோனா காலத்தில் இந்தியாவில் மட்டும் 41 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பறிகொடுத்திருக்கின்றனர் என்கிறது ஐநாவின் சர்வதேச தொழிலாளர் நிறுவனமும் ஆசிய வளர்ச்சி வங்கியும். இந்த இரு அமைப்புகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கட்டுமான தொழில், வேளாண் தொழிலில் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்திருக்கின்றனர். 25 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒப்பிடுகையில் 15 வயது முதல் 24 வயது வரையிலான இளைஞர்கள் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர் எனவும் சுட்டிக் காட்டுகிறது இந்த அறிக்கை.

டெல்லியில் இன்று கடற்படை தளபதிகளின் 3 நாட்கள் மாநாடு தொடக்கம்- ராஜ்நாத்சிங் பங்கேற்பு டெல்லியில் இன்று கடற்படை தளபதிகளின் 3 நாட்கள் மாநாடு தொடக்கம்- ராஜ்நாத்சிங் பங்கேற்பு

மேலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்தால் 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட 61 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழக்கவும் நேரிடுமாம். இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 32.5% ஆக உள்ளது; இலங்கையில் இது 37.8% ஆக இருக்கிறது என்கிறது அந்த அறிக்கை.

Recommended Video

    Delhi AIIMS மருத்துவமனையில் Amit Shah அனுமதி | OneIndia Tamil

    English summary
    According to the ILO, ADB Reports 41 lakh youth in the India lost jobs due to the coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X