டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லடாக் எல்லையில் இந்தியாவின் பதிலடியில் 43 சீனா ராணுவ வீரர்கள் பலி- பலர் படுகாயம்

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சீனா ராணுவத்தினர் 43 பேர் பலியானதாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    India China border-ல் 20 இந்திய வீரர்களை கொன்ற சீன ராணுவம்..பதிலடிக்கு தயாராகும் இந்தியா

    லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்தினர் மீது சீனா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இத்தாகுதலில் இந்திய தரப்பில் 3 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக முதலில் கூறப்பட்டது.

    43 Chinese soldiers killed in the stand-off at Ladakh

    பின்னர் ராணுவம், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைகளில் இருதரப்புகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பதிவு செய்திருந்தன.. இந்த நிலையில் இந்திய தரப்பில் குறைந்தது 20 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    இ0ந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. அதேநேரத்தில் இந்தியாவின் தாக்குதலில் சீனா ராணுவத்தினர் 43 பேர் பலியானதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சீனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான குளோபல் டைம்ஸ் ஏற்கனவே 5 வீரர்கள் உயிரிழந்ததை உறுதி செய்திருந்தது. இந்த நிலையில் சீனா தரப்பில் மிக கடுமையான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கின்றன தகவல்கள்.

    English summary
    Indian intercepts reveal that Chinese side suffered 43 casualties including dead and seriously injured in face-off in the Galwan valley: Sources confirm to ANI
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X