டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2014-லில் இருந்து வேலைவாய்ப்பு குறைந்து விட்டது... ஆய்வில் ஷாக் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: தொழில்துறையில் வேலைவாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.

அனைத்து இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி சிறு தொழிலில் 35 சதவீதம், நடுத்தர தொழில்களில் 24 சதவீதம், குறு தொழில்களில் 32 சதவீதம், வர்த்தக பிரிவில் 43 சதவீதம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன.

43% job loss due to note ban, GST

நாடு முழுவதும் 34,700 நிறுவனங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்ததற்கு காரணம் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற வரிகள் தான் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே போல், கடந்த 2014 ம் ஆண்டில் இருந்து 70 சதவீதம் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் தலைவர் ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

English summary
Statistical figures have emerged that employment has declined dramatically in industry. 43% of the trader's division job loss, 35% in small divisions, and 24% loss of middle jobs
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X