டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை

தகவல் தொழில்நுட்பம் சட்டம் 69ஏ பிரிவின் கீழ் 43 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் 43 மொபைல் செயலிகளை மத்திய அரசு தடை செய்து உள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் செயல்களில் ஈடுபட்ட மொபைல் செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பல ஆப்கள் டேட்டிங் ஆப்களாகும்.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69 ஏ பிரிவின் கீழ் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

43 new Chinese apps banned by India

இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் எதிர்த்து பல செயலிகளை கடந்த ஜூன் 29 மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் அரசாங்கம் தடைசெய்தது. தடைசெய்யப்பட்ட செயலிகளில் பெரும்பாலானவை சீனவை சேர்ந்தவை. கடந்த 2020 ஜூன் 29 ஆம் தேதி இந்திய அரசு 59 மொபைல் செயலிகளும் 2020 செப்டம்பர் 2 ஆம் தேதி 118 செயலிகளும் தடை செய்யப்பட்டன.

தாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமிதாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி

இந்த நிலையில் மேலும் 43 மொபைல் செயலிகளை மத்திய அரசு தடை செய்து உள்ளது. வீடியோ கேம்கார்ட், பிசினஸ் கார்ட் ரீடர் காம் கார்ட், ஏசியன் டேட்டிங் ஆப் சீனா லவ், சிங்கிள்ஸ் டேட்டிங் ஆப், ஏசியன் டேட்டிங் ஆப், வி டிவி, உள்ளிட்ட 43 ஆப்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதில் ஷாப்பிங் செய்யும் ஆப் அலி எக்ஸ்பிரஸ் ஆப்பும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்திய இணைய குற்றவியல் ஒருங்கிணைப்பு மையம், உள்துறை அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட விரிவான அறிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவில் உள்ளவர்கள் இந்த செயலிகளை பயன்படுத்துவதை தடுப்பதற்கான உத்தரவை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது என்று அரசாங்க செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The government of India has blocked 43 new Chinese mobile apps in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X