டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி.. தப்லீக் ஜமாத் மீட்டிங் சென்ற 44 வெளிநாட்டினர்.. நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள முடிவு

டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் 960 பேரில் 44 பேர் இந்தியாவில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் 960 பேரில் 44 பேர் இந்தியாவில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனா பரவிய தொடக்க நாட்களில் டெல்லி மேற்கு நிஜாமுதீன் பகுதியில் நடந்த தப்லீக் ஜமாத் கூட்டம் காரணமாக நாட்டில் பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு உள்ள ஒரு வழிபாட்டு தளத்தில்தான் இந்த கூட்டம் நடந்தது.

44 Foreigners who went to Tablighi meet will face trial in a local court

கடந்த மார்ச் 8 முதல் மார்ச் 15ம் தேதி இரவு வரை இந்த கூட்டம் நடந்தது. இதில் 1500 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, பல்வேறு மாநிலங்களுக்கு சென்றவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு பலருக்கும் ஏற்பட்டது .

தமிழகத்தில் மட்டும் இதில் கலந்து கொண்டவர்கள் மூலம் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக சில மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இதில் கலந்து கொண்ட வெளிநாட்டினர்களின் விசாவை ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்த செய்தி உண்மையா? அமைச்சர் விஜயபாஸ்கர் தரும் விளக்கம் என்ன?தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்த செய்தி உண்மையா? அமைச்சர் விஜயபாஸ்கர் தரும் விளக்கம் என்ன?

அமெரிக்கா, பிரிட்டீஷ், தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 960 வெளிநாட்டினரின் விசாக்களை நிரந்தரமாக மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இவர்கள் விசா விதிமுறைகளை மீறிவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதாவது டூரிஸ்ட் விசாவில் வந்துவிட்டு, மதத்தை பரப்பியதாக இவர்கள் மீது புகார் உள்ளது. மொத்தம் மாவட்டங்களில் இவர்கள் மதத்தை பரப்பியதாக புகார் உள்ளது.

இந்த நிலையில் இந்த 960 பேரில் 255 பேர் தங்கள் நாட்டு தூதரகத்தின் உதவியுடன் வெறும் அபராத தொகையை மட்டும் கட்டிவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்டனர். இவர்கள் 5000-10000 ரூபாய் அபராதம் கட்டிவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேறி உள்ளனர். இன்னும் சிலர் இதே முறையை பயன்படுத்தி தங்களுக்கு எதிரான எப்ஐஆரை நீக்கிவிட்டு , சொந்த நாடு திரும்ப உள்ளனர்.

இந்த நிலையில் 44 பேர் இந்தியாவில் இருந்து தங்களுக்கு எதிரான வழக்கை எதிர்கொள்ள இருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பெயரில் டெல்லி கீழமை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.நாங்கள் மதத்தை பரப்ப இங்கே வரவில்லை.

மதம் குறித்து கற்கவே இங்கு வந்தோம். அதனால் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இந்தியாவில் இருந்து முழுக்க வழக்கை எதிர்கொள்வோம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த 44 பேரில் சிலர் அமெரிக்காவை சேர்ந்த இஸ்லாமியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
44 Foreigners who went to Tablighi meet will face trial in a local soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X