டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதவெறுப்பு வன்முறைகள்- மோடிக்கு அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், ரேவதி உட்பட 49 பேர் கடிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் மதவெறுப்பு வன்முறைகள் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக பிரதமர் மோடிக்கு பல்துறை பிரபலங்கள் 49 பேர் கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளனர்.

அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், ரேவதி, பினாயக் சென், ரித்தி சென் என பலதுறைகளின் பிரபலங்கள் 49 பேர் பிரதமர் மோடிக்கு கூட்டாக அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

49 Eminent Personalities Write To PM Modi On Mob Lynching

மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது.

எந்த ஒரு குடிமகனும் தமது சொந்த தேசத்தில் உயிர் அச்சத்துடன் வாழக் கூடாது. மதவெறுப்புகளால் வன்முறைகளை நிகழ்த்துவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? கும்பல் வன்முறையாளர்களை நாடாளுமன்றத்தில் விமர்சித்திருக்கிறீர்கள்.

மோடி, அத்வானி, சு.சுவாமி... பாஜக தலைவர்களை மட்டுமே சந்திக்கும் வைகோ... காங்.-ல் புகைச்சல்!மோடி, அத்வானி, சு.சுவாமி... பாஜக தலைவர்களை மட்டுமே சந்திக்கும் வைகோ... காங்.-ல் புகைச்சல்!

ஆனால் அது போதாது. ஜெய் ஶ்ரீராம் என்கிற முழக்கம் வன்முறைக்கான ஆயுதமாக மாறியிருப்பது பெரும் கவலைக்குரியது. ஜெய்ஶ்ரீராம் முழக்கத்தை முன்வைத்து கும்பல் வன்முறைகள் பல இடங்களில் நடைபெற்றுள்ளன.

சிறுபான்மையினரும் தலித்துகளும் இந்த கும்பல் வன்முறையாளர்களால் குறிவைத்து தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
49 Einent personalities wrote a letter to Prime Minister Narendra Modi and expressed concern over the growing trend of lynching by a mob.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X