டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை குண்டுவெடிப்பு.. இந்தியர்களின் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு.. இந்திய வெளியுறவுத் துறை தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு - வீடியோ

    டெல்லி: இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உட்பட 8 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில், வெளிநாட்டினர் உட்பட 290 பேர் உயிரிழந்தனர். உலக நாடுகள் அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இலங்கைக்கு சுற்றுலா சென்ற 7 இந்தியர்கள் மாயம்.. 7-இல் இருவர் பலியை உறுதி செய்த இந்திய வெளியுறவு துறை இலங்கைக்கு சுற்றுலா சென்ற 7 இந்தியர்கள் மாயம்.. 7-இல் இருவர் பலியை உறுதி செய்த இந்திய வெளியுறவு துறை

    3 பேர் பலி

    3 பேர் பலி

    இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டுவெடிப்பில் பலியானோரில் 3 பேர் இந்தியர்கள் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

    மேலும் இருவர் பலி

    மேலும் இருவர் பலி

    அவர்கள் லோகாஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் ஆவர் என சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த தாக்குதலில் மேலும் இரு இந்தியர்கள் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

    கர்நாடகத்தவர்கள்

    அவர்கள் கே.ஜி. ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா ஆகிய இருவர் ஆவர். இருவரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர்கள் தேர்தல் முடிந்தவுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

    தேடும் பணி

    தேடும் பணி

    அப்போது வெடிகுண்டு தாக்குதல் நடந்த ஹோட்டலில் இவர்கள் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் இவர்களுடன் சுற்றுலா வந்த அதே கட்சியைச் சேர்ந்த மேலும் 5 பேர் மாயமாகிவிட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    English summary
    The death toll of Indians who died in Srilankan bomb blast raised from 3 to 5, MEA confirms.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X