டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்!

பாஜகவின் தொடர் தோல்விகளை அடுத்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜகவின் தொடர் தோல்விகளை அடுத்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்காக ஆசையோடு காத்திருந்த பாஜக தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

2019 நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த தோல்வி எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது அமித் ஷாவிற்கு எதிராக பாஜகவிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.

இப்போ வேண்டாம்.. நேரம் சரியில்லை.. பாஜக தோல்வியால் அரசியல் அறிவிப்பை தள்ளிப்போட்டாரா ரஜினி? இப்போ வேண்டாம்.. நேரம் சரியில்லை.. பாஜக தோல்வியால் அரசியல் அறிவிப்பை தள்ளிப்போட்டாரா ரஜினி?

வெற்றி கூட்டணி

வெற்றி கூட்டணி

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பிரதமர் மோடி கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி என்றுதான் இந்தியா முழுக்க பேசப்பட்டது. அதேபோல் குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் பாஜக நான்கு முறை வெற்றிபெற்றது. நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவின் வெற்றிக்கு அமித் ஷா பெரிதாக உதவினார்.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பாஜக வரிசையாக தோல்வியை சந்திக்க தொடங்கியது. 2014க்கு பின் இந்தியாவில் மொத்தம் 30 லோக் சபா இடைத்தேர்தல் நடந்தது. இதில் மொத்தமாக 6ல் மட்டுமே பாஜக வென்று இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிதான் 20 தொகுதிகளில் வென்று இருக்கிறது. இது போக 4 இடங்களில் மாநில கட்சிகள் தனியாக வென்றுள்ளது.

கர்நாடகா தேர்தல்

கர்நாடகா தேர்தல்

முக்கியமாக கர்நாடகா தேர்தலில் பாஜகவிற்கு கைக்கு எட்டிய வெற்றி வாய்க்கு எட்டவில்லை. கர்நாடக தோல்விதான் பாஜகவை மனரீதியாக பெரிய அளவில் பாதித்தது. அதன்பின்தான் அமித் ஷாவின் திறமை மீதும் அரசியல் ராஜதந்திரம் மீதும் பாஜகவினருக்கு சந்தேகம் வந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் அமைச்சர் டி.கே சிவக்குமாரிடம் அமித் ஷா தோற்றுவிட்டார் என்று கூட பெரிய விவாதங்கள் வைக்கப்பட்டது.

இப்போது பெரிய தோல்வி

இப்போது பெரிய தோல்வி

இந்த நிலையில்தான் இப்போது பாஜக பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய ஐந்தில் ஒன்றில் கூட பாஜக வெற்றிபெறவில்லை. இதனால் தற்போது அமித் ஷாவிற்கு எதிராக பாஜகவின் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

பதவி விலக வேண்டும்

பதவி விலக வேண்டும்

அதன்படி பாஜகவின் தொடர் தோல்விகளை அடுத்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அவர் பதவி விலக வேண்டும் என்றுள்ளனர். சமூக வலைத்தளங்களில் உள்ள பாஜகவினர் பலர் இந்த கோரிக்கையை வைத்து இருக்கிறார்கள்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

ஆனால் அமித் ஷா தற்போது பதவி விலக வாய்ப்பில்லை என்கிறார்கள். அடுத்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி எப்படி தோனி இல்லாமல் நடக்காதோ அதேபோல்தான் 2019 நாடாளுமன்ற தேர்தலும் பாஜக தலைவர் பதவியில் அமித் ஷா இல்லாமல் நடக்காது என்று சில பாஜகவினர் கூறுகிறார்கள்.

English summary
5 state election results: BJP cadres are asking for Amit Shah resignation from the National Cheif post after massive flop show.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X