டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எப்போதும் இல்லாத மாற்றம்.. முதல்முறை தோல்வியை ஒப்புக்கொண்ட மோடி.. என்ன காரணம்?

பிரதமர் மோடி ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டதற்கு பின் நிறைய காரணம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்கள் அளித்த தீர்ப்பு இது... தோல்வி குறித்து மோடி கருத்து- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடி ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டதற்கு பின் நிறைய காரணம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரிய தோல்வியை தழுவி இருக்கிறது. சட்டீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா என்று ஐந்து மாநிலத்திலும் பாஜக தோல்வியை தழுவி உள்ளது.

    இந்த தேர்தல் தோல்வியை பிரதமர் மோடி வெளிப்படையாக ஒப்புக்கொண்டு இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு அவர் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

    ஏற்கிறோம்

    பிரதமர் மோடி இந்த தேர்தல் குறித்து வெளியிட்டு இருக்கும் டிவிட்டில், மக்களின் ஆணையை நாங்கள் பணியுடன் கேட்டுக்கொள்கிறோம். சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆட்சி அமைக்க வாய்ப்பை தந்திருந்த மக்களுக்கு நன்றி. அந்த மாநிலங்களில் இருந்த பாஜக அரசுகள், மாநில முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தது.

    காங்கிரஸ் வெற்றி

    காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதற்கு வாழ்த்துகள். தெலுங்கானாவில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவிற்கும் வாழ்த்துகள். மிசோராமில் வெற்றி அடைந்த மிசோ தேசிய முன்னணிக்கும் வாழ்த்துகள்.

    பாஜக ஒப்புக்கொண்டது

    மாநில தேர்தல்களுக்காக பாஜக தொண்டர்கள் காலையில் இருந்து இரவு வரை உழைத்தனர். அவர்களின் கடின உழைப்பை நான் வணங்குகிறேன். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கம். இந்த முடிவு இன்னும் மக்களுக்கு சேவை செய்யவும், நாட்டின் வளர்ச்சிக்கும் உதவ வழி வகுக்கும் என்று கூறியுள்ளார்.

    மொத்தமாக ஒப்புக்கொண்டார்

    மொத்தமாக ஒப்புக்கொண்டார்

    பிரதமர் மோடி முதல்முறையாக பாஜகவின் தோல்வியை ஒப்புக்கொண்டார் என்றுதான் கூறவேண்டும். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் அங்கம் என்றதன் மூலம் முதல் முறையாக மோடி தான் தோல்வி அடைந்ததை ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்கிறார்கள் . இது பாஜகவினருக்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

    உண்மையாக இருக்குமோ?

    உண்மையாக இருக்குமோ?

    குஜராத் சட்டமன்ற தேர்தல் தொடங்கி எந்த தேர்தலிலும் பெரிதாக தோல்வி அடையாத மோடி முதல்முறை இப்படி ஒரு தோல்வியை சந்தித்து இருக்கிறார். இந்த தோல்வியால் நிஜமாகவே மனமுடைந்து அவர் இப்படி டிவிட் செய்துள்ளார் என்கிறார்கள். அவரின் இந்த டிவிட் நிஜமானதுதான் என்று பாஜகவினர் கூறுகிறார்கள்.

    எல்லாம் நாடகம்

    எல்லாம் நாடகம்

    அது சமயம் டிவிட் செய்ய காரணம், அனுதாபம் தேடத்தான் என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். இந்த வருத்தமான டிவிட் மூலம் தான் இழந்த மதிப்பை அனுதாபம் மூலம் மீண்டும் மீட்டெடுக்க முடியும். அதனால்தான் மோடி வருத்தப்படுவது போல பேசுகிறார். இது நாடாளுமன்ற தேர்தலுக்கான நாடகம் என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.

    English summary
    5 state election results: Prime Minister Modi's apologize may a be another Jumla for 2019 election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X