டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பப்பு பப்பு என்று கிண்டல் செய்த பாஜக.. சைலண்டாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்த ராகுல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக கட்சி மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக கட்சி மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.

பாஜக வடஇந்தியாவில் இப்படி ஒரு தோல்வியை எதிர்பார்த்து இருக்காது. தெலுங்கானா தேர்தலில் தோற்பது தெரிந்த கதை என்றாலும் ராஜஸ்தான் மத்திய பிரதேச தேர்தல் தோல்வி பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்காதது.

உலகிலேயே மிகவும் வலுவான கட்சி என்று 56 இன்ச் மார் தட்டிக் கொண்டு இருந்த பாஜகவிற்கு இது பேரிடி. இதில் இருந்து பாஜக மீண்டு வர பல வருடம் ஆகும்.

பப்பு என்று கிண்டல்

பப்பு என்று கிண்டல்

எதிரியை பலவீனமாக காட்டினாலே பாதி போட்டியில் வென்றுவிடலாம் என்ற விதியை பின்பற்றித்தான் பாஜக ராகுல் காந்திக்கு பப்பு என்று பெயர் வைத்தது. ராகுல் காந்திக்கு ஒன்றும் தெரியாது, ராகுல் காந்திக்கு அரசியல் அறிவு இல்லை, ராகுல் காந்தி சிறந்த தலைவர் இல்லை என்று பாஜக அவரை பலவாறாக மட்டம் தட்டியது. அதோடு ராகுலை வெளிப்படையாக பப்பு பப்பு என்று கிண்டல் செய்தது.

வேலை செய்தது

வேலை செய்தது

அதேபோல் பாஜகவின் இந்த பப்பு பிரச்சாரம் கொஞ்சம் வேலை செய்தது என்றுதான் சொல்ல வேண்டும். கடைசியாக நடந்த கர்நாடக தேர்தல் வரை இந்த பிரச்சாரம் நன்றாகவே எடுபட்டது. பாஜகவை சேராதவர்கள் கூட ராகுலை பப்பு பப்பு என்றுதான் அழைத்து வந்தனர். ஆனால் தற்போதைய தேர்தல் முடிவின் மூலம் பப்பு என்ற விமர்சனம் காலாவதியாகி உள்ளது கண்கூடாக தெரிகிறது.

தலைவர் ஆனார்

தலைவர் ஆனார்

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்ட பின், கொஞ்சம் அதிரடியாக வேலை செய்ய தொடங்கினார். தன் மீது இருக்கும் விமர்சனங்களை தூர வைத்துவிட்டு, தனக்கு தெரிந்த விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். உண்மையான பிரச்சனைகளில் குரல் கொடுக்க ஆரம்பித்தார். டிமானிடைசேஷன் தொடங்கி ஜிஎஸ்டி வரை பல விஷயங்களுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தார்.

கெத்து காட்டிய நிமிடம்

கெத்து காட்டிய நிமிடம்

ராகுல் காந்தி உண்மையில் வைரல் ஆன நாள் என்றால் அது நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு எதிராக நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போதுதான். அப்போது ராகுல் பேசிய பேச்சு இந்தியா முழுக்க பிரபலம் ஆனது. அதோடு மோடியை ராகுல் கட்டிபிடித்தது, திரும்பி வந்து கண் அடித்தது என்று ராகுல் அந்த நாளில் தன்னை வேறு ஒரு நபராக இந்திய அரசியலுக்கு பிரகடனப்படுத்தினார். அந்த பிரகடனம் தற்போது பெரிய பலனை அளித்துள்ளது.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்

சர்ஜிக்கல் ஸ்டிரைக்

இதோ சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேட ஆசைப்பட்டுக் கொண்டு நேரத்தில் ராகுல் காந்தி அசால்ட்டாக பாஜக மீதே சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்துவிட்டார். அமித் ஷா முன்பு ராகுல் நிற்க முடியுமா என்ற கேள்வியை எல்லாமும் புறம் தள்ளிவிட்டு, நெத்தியடியாக பாஜகவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். இனியும் ராகுலை பாஜக பப்புவாக அணுகி மேலும் தோல்வியை சந்திக்காது என்று எதிர்பார்க்கலாம், ஏனென்றால் பப்புக்கள் ஹீரோவாகும் தருணமும் ஹீரோக்கள் பப்புவாக மாறும் தருணமும் அத்தனை தூரத்தில் இருப்பதாக தெரியவில்லை!

English summary
5 state election results: The so-called Pappu Rahul Gandhi has done a Surgical Strike to BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X