டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு... 5 ஆண்டுகளில்...ரூ. 517.8 கோடி... ராஜ்ய சபாவில் தகவல்!!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு வரை 58 நாடுகளுக்கு பயணித்த வகையில் அவரது பயணப் போக்குவரத்து செலவு ரூ. 517.8 கோடியாக இருந்துள்ளது என்று ராஜ்ய சபாவில் வெளி விவகாரத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்டு இருந்த பயணங்கள் குறித்த தகவலை எழுத்துபூர்வமாக வெளி விவகாரத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் ராஜ்ய சபாவில் அளித்து இருந்தார்.

 சீர்திருத்தங்களை செய்யாமல் போனால் ஐ.நா மீதான நம்பகத்தன்மையும் போய்விடும்... மோடி சீர்திருத்தங்களை செய்யாமல் போனால் ஐ.நா மீதான நம்பகத்தன்மையும் போய்விடும்... மோடி

என்ன பலன்கள்

என்ன பலன்கள்

எந்த நாட்டுக்கு எப்போது சென்றார். எதற்காக சென்று இருந்தார். என்ன ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது போன்ற தகவல்களையும் குறிப்பிட்டு இருந்தார். பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்ற வகையில் நாட்டுக்கு என்னென்ன பலன்கள் கிடைத்து இருக்கிறது என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.

முதலீடு

முதலீடு

இதையடுத்து அவர் அளித்து இருந்த தகவலில், ''இவரது வெளிநாட்டு பயணத்தினால், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கடல்சார், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாடுகளுடன் இந்தியாவின் உறவு வலுவடைந்துள்ளது. வெளிநாடுகளுடன் மேற்கொண்ட இருதரப்பு சந்திப்பினால், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் புரிதலை அந்த நாடுகள் புரிந்து கொண்டுள்ளன.

பயங்கரவாதம்

பயங்கரவாதம்

இவை நமது மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு உதவியுள்ளது. காலநிலை மாற்றம், நாடு கடந்த குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட உலகளாவிய நிகழ்வுகளை வடிவமைப்பதில் இந்தியா இப்போது அதிகளவில் பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும் சர்வதேச சூரிய மின் உற்பத்தியில் கூட்டணி மற்றும் பேரழிவு தடுக்கும் உள்கட்டமைப்பிற்கான கூட்டணி அமைப்பது குறித்தும் இந்தியா முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுலா

உலக சுற்றுலா

கடந்த ஆண்டுகளில் பிரதமர் மோடி மேற்கொண்டு இருந்த வெளிநாட்டுப் பயணங்களை எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்து இருந்தனர். கடந்தாண்டு உலக சுற்றுலா நாளில், எதிர்கட்சிகள் இவர் மேற்கொண்டு இருந்த ஏர் இந்தியா விமானப் பயணத்தை தொகுத்து, ட்விட்டரில் பதிவிட்டு, ''உலக சுற்றுலா தினம்'' என்று பதிவிட்டு இருந்தனர். இதற்கு முன்பு ''வெளிநாட்டு வாழ் பிரதமர்'' என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

English summary
5 years, 58 countries, Rs 517.8 crore spend on PM Modi's foreign travel in Rajya Sabha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X