டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜூலை இறுதிக்குள் மாநிலங்களுக்கு 51.7 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிப்போம்.. மத்திய அரசு நம்பிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: ஜூலை மாத இறுதிக்குள் மாநிலங்களுக்கு 51.7 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுவிடும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜூலை இறுதிக்குள் 51.6 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு, கடந்த மே மாதம் தெரிவித்திருந்ததாகவும், ஆனால், 50 கோடி கொவிட் தடுப்பூசிகள் என்ற இலக்கை இந்தியா தவறவிடும் என ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தவறான தகவல்.

மெர்சல் தொடங்கி முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை.. அனைத்திலும் சொல்லி அடிக்கும் 'தளபதி' விஜய்மெர்சல் தொடங்கி முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை.. அனைத்திலும் சொல்லி அடிக்கும் 'தளபதி' விஜய்

51.7 கோடி தடுப்பூசிகள்

51.7 கோடி தடுப்பூசிகள்

ஜனவரி முதல் ஜூலை 31ம் தேதி வரை 51.7 கோடி டோஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்பதுதான் உண்மை. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படும் தடுப்பூசிகள் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு, அதன்படி விநியோகிக்கப்டுகின்றன. இம்மாத இறுதிக்குள் நாடு முழுவதும், 51.7 கோடி டோஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டிருக்கும். ஆனால், அனைத்து தடுப்பூசிகளும் இம்மாத இறுதிக்குள் பயன்படுத்தப்படும் என அர்த்தம் அல்ல.

மொத்தம் 45.7 கோடி தடுப்பூசிகள்

மொத்தம் 45.7 கோடி தடுப்பூசிகள்

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 45.7 கோடி டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 31ம் தேதிக்குள், கூடுதலாக 6.03 கோடி டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும். இதை சேர்த்தால், இம்மாத இறுதிக்குள் 51.7 கோடி டோஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும்.

44.19 கோடி பேருக்கு தடுப்பூசிகள்

44.19 கோடி பேருக்கு தடுப்பூசிகள்

இந்தியாவில் 44.19 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது உலகிலேயே மிக அதிகளவிலான எண்ணிக்கை. இவை குறுகிய காலத்தில் விரைவாக போடப்பட்டுள்ளன. இவர்களில் 9.60 கோடிப் பேருக்கு, இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.

ஜூலை இலக்கு

ஜூலை இலக்கு

கடந்த ஜூன் மாதம், மொத்தம் 11.97 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டன. அதேபோல், ஜூலை மாதத்தில் 26ம் தேதி வரை 10.62 கோடி தடுப்பூசிகள் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English summary
According to the Ministry of Health and Family Welfare Press release 516 million vaccine doses might have been picked up from various sources which informed about the likely availability of the vaccine doses from January 2021 to the end of July, 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X