டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபாவுக்கான காங்கிரஸ் குழுவின் தலைவராக சோனியா காந்தி தேர்வு

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரசின் தலைமை பொறுப்பிற்கு அதிரடி போட்டி போடும் தலைவர்கள்

    டெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டத்தில் லோக்சபாவுக்கான காங்கிரஸ் குழுவின் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

    மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு கூட தேர்வாகாத நிலை காங்கிரஸுக்கு உள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்தனர்.

    நாடாளுமன்றத்தில் ஜுலை 5ம் தேதி பட்ஜெட் தாக்கல்.. தமிழகத்தின் நிர்மலா சீதாராமனுக்கு முதல் சவால் நாடாளுமன்றத்தில் ஜுலை 5ம் தேதி பட்ஜெட் தாக்கல்.. தமிழகத்தின் நிர்மலா சீதாராமனுக்கு முதல் சவால்

    சமாதானம்

    சமாதானம்

    இதைத் தொடர்ந்து ராகுல்காந்தியும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய முன்வந்தார். இது அக்கட்சியின் காரிய கமிட்டியில் ஏற்கப்படவில்லை. தொடர்ந்து தலைவர்கள் செய்த சமாதானத்தினால் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

    வராமல்

    வராமல்

    எனினும் அவர் மீண்டும் தனது பதவியை ராஜினாமா செய்ய பிடிவாதமாக உள்ளார். அவரை தொடர்ந்து தலைவர்கள் சமாதானம் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் எந்த தலைவரையும் பார்க்காமலும் கட்சி அலுவலகத்திற்கு வராமலும் இருந்து வருகிறார்.

    மாநிலங்களவை எம்பி

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடாளுமன்ற மக்களவை எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் 52 எம்பிக்களுடன் மாநிலங்களவை எம்பிக்களும் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை

    ஆலோசனை

    இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டது. மேலும் காங்கிரஸ் தலைவர் குறித்த தேர்வும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    சோனியா

    சோனியா

    ஏற்கெனவே லோக்சபாவுக்கான காங்கிரஸ் குழுவின் தலைவராக தற்போது சோனியா காந்தி உள்ளார். அவரது உடல் நிலை பாதிப்பு காரணமாக அப்பதவிக்கு ராகுல்காந்தி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் லோக்சபாவுக்கான காங்கிரஸ் குழுவின் தலைவராக சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்மொழிந்தார். இதையடுத்து சோனியா அப்பதவிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

    English summary
    52 Loksabha MPs and Rajya sabha mps of Congress party meet today. In this meeting Congress party's new President will be elected?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X