டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் 548 மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் கொரோனாவால் பாதிப்பு

Google Oneindia Tamil News

இந்தியா முழுவதும் கோவிட் -19 என்ற கொரோனா தொற்று நோயால் 548 மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று ( செவ்வாயன்று) கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் உயிரிழப்பு மூன்று இலக்கங்களுக்கு வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 199 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது, இதனால் நாடு முழுவதும் இதுவரை கொரானாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,688 ஆக உயர்ந்துள்ளது.

548 doctors, nurses, paramedics infected with Covid-19 across India

புதிய தொற்று பாதிப்ககள் கடந்த 24 மணி நேரத்தில் 2,801 ஆக உயர்ந்தன, இது திங்கள்கிழமைக்கு பிறகு இதுவரை இல்லாத இரண்டாவது அதிகபட்சம் ஆகும். இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,333 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் இதுவரை நாடு முழுவதும் சுமார் 548 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பராமரித்த தகவல்களின்படி, அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த எண்ணிக்கையில் களப்பணியாளர்கள், வார்டு பாய்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், பாதுகாப்புக் காவலர்கள், ஆய்வக உதவியாளர்கள், பியூன்கள், சலவை மற்றும் சமையலறை ஊழியர்கள் பலர் இடம் பெறவில்லை.

Recommended Video

    siddha doctor thanikachalam arrested by chennai police

    எனினும் மத்திய அரசு பராமரித்து வரும் இந்த பட்டியலில் எந்த மாநிலத்தில் அல்லது எந்த ஊரில் அதிக மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை.

    English summary
    Coronavirus has infected around 548 doctors, nurses and paramedics across the country so far, according to data maintained by the Centre, official sources said on Wednesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X