டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்... டெல்லியிலும் நில அதிர்வு... பொதுமக்கள் பீதி

Google Oneindia Tamil News

டெல்லி:ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கம், டெல்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.

6.1 magnitude earthquake in afghanistan, mild tremors felt In delhi

நிலநடுக்கத்தின் மைய புள்ளி காபூல் நகரத்தில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 212 கிலோ மீட்டர் ஆழத்துக்கு பூமியின் அடியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது. வீடுகள்,கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து வெளியே ஓடினர்.

டெல்லியை தவிர வட இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும்,நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தோ, உயிரிழப்புகள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

English summary
A 6.1 magnitude earthquake struck the Hindu Kush region in Afghanistan on Saturday evening, the Indian Meteorological Department reported.Mild tremors were felt all the way in Delhi and other parts of north India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X