டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிலநடுக்கம்.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் பாதிப்பு.. சாலைகள் சேதம், சுவர்கள் இடிந்தன

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மாலை 4:31 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6.3-magnitude earthquake in India, and POK

40 கி.மீ சுற்றளவுக்கு நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்துள்ளது. உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்து உடனடியாக எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்றபோதிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாதிப்பு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

வட இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். அச்சத்தால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருவிற்கு ஓடி வந்தனர். அலுவல் நேரம் என்பதால், அலுவலகத்திலிருந்து ஆண்களும், பெண்களும் தெருக்களில் ஓடி சென்று நின்றனர்.

வடமாநிலங்களில் நிலநடுக்கம்.. டெல்லியில் 6.1 ரிக்டர் அளவுகோலில் பதிவு.. மக்கள் பீதி

பாகிஸ்தான் தலைநகர், இஸ்லாமாபாத், ஆக்கிரமிப்பு காஷ்மீர், பெஷாவர், ராவல்பிண்டி மற்றும் லாகூர் உள்ளிட்ட பல நகரங்களில், 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் 8-10 விநாடிகள் நீடித்தன, ஆனால் அவை வலுவாக உணரப்பட்டன. ஷியால்கோட், சர்கோதா, மன்சேரா, குஜராத், சித்ரால், மலாக்கண்ட், முல்தான், ஷாங்க்லா, மற்றும் மிர்பூர் போன்ற பாகிஸ்தான் நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மீர்பூர் மாவட்டத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
The Indian Meteorological Department said the 6.3-magnitude earthquake shook the Pakistan-India border at 4:31 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X