டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம்.. அரசு ஒப்பந்தங்களை முடிக்க 6 மாதங்கள் கூடுதல் கால அவகாசம்: நிர்மலா

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாதிப்படைந்துள்ள ரியல் எஸ்டேட் தொழிலுக்கு உதவி செய்யும் வகையில், சில அறிவிப்புகள் வெளியிடுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Recommended Video

    சிறு குறு தொழில் முனைவோருக்கு சலுகை.. இன்னும் என்னென்ன சலுகைகள்?

    டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட போகிறது.

    6 Extension of Registration and Completion date of Real Estate projects: Nirmala Sitharaman

    இந்த வைரஸ் பிரச்சினை என்பது கடவுளின் செயல் என்றுதான் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதிக்குள் நிறைவடைய வேண்டிய, அரசு, ஒப்பந்த பணிகள் அனைத்தையும் மேலும் 6 மாதங்களுக்கு எந்த நிபந்தனையும் இன்றி நீட்டிக்கப்படும்.

    எனவே இதற்காக தனியாக விண்ணப்பங்களை நிரப்பி கொடுக்க வேண்டியதில்லை. கூடுதலாக 6 மாதங்கள் சலுகை வழங்கப்படுவதற்கான சான்று அரசால் கொடுக்கப்படும்.

    ரூ.15,000 வரை ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மேலும் 3 மாதம் இ.பி.எப் செலுத்த வேண்டாம்- நிர்மலா அறிவிப்புரூ.15,000 வரை ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மேலும் 3 மாதம் இ.பி.எப் செலுத்த வேண்டாம்- நிர்மலா அறிவிப்பு

    தொழிலாளர் பற்றாக்குறை, உள்ளிட்டவற்றால் ரியல் எஸ்டேட் துறை அவதிப்படுவதால், இந்த கால நீட்டிப்பு அவர்களுக்கு பலனளிக்கும். ரூ.200 கோடி வரையிலான டெண்டர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் பெற அனுமதிக்க முடியாது. உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    English summary
    FM Nirmala Sitharaman on Real Estate projects, States and regulatory authorities should treat Covid-19 as 'Force Majeure'. Extend registration and completion date suo-moto by six months for all registered projects before March 25.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X